SriReddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ - யாரை சொல்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி-actress srireddy criticized for telling the story of giving a treat to male foxes - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Srireddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ - யாரை சொல்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி

SriReddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ - யாரை சொல்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி

Marimuthu M HT Tamil
Aug 31, 2024 09:26 PM IST

SriReddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ என கதை சொல்லி விமர்சித்த நடிகை ஸ்ரீரெட்டியின் பதிவு வைரல் ஆகியுள்ளது.

SriReddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ - கதை சொல்லி  விமர்சித்த நடிகை ஸ்ரீரெட்டி
SriReddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ - கதை சொல்லி விமர்சித்த நடிகை ஸ்ரீரெட்டி

ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவர், நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த 2011ஆம் ஆண்டு, 'நேனு நானா அபத்தம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார். பின் அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

மிகக்குறைவான படங்களே நடித்தாலும் ஆந்திரா மற்றும் தமிழ் சினிமாவில் நடக்கும் உள்மறைவு வேலைகளை அம்பலப்படுத்தியதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடையே ரசிகர்களிடையே பரவலாக அறியப்படுகிறார்.

ஆடையைக் கழற்றிக்காட்டிய ஸ்ரீரெட்டி:

கடந்த 2019ஆம் ஆண்டு, தெலுங்கு திரைப்பட சங்கமான, மா முன்பு, தனது மேலாடையைக் களைந்து, போராட்டத்தில் ஈடுபட்டார், ஸ்ரீரெட்டி. தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பல்வேறு தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களைக் குற்றம்சாட்டினார்.

ஸ்ரீரெட்டியின் தொடர்குற்றச்சாட்டுகளால், மனித உரிமைகள் அமைப்பு, தெலங்கானா மாநிலத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியது.

நடிகர் விஷால், நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாகப் பல்வேறு புகார்களை வெளிப்படையாக அறிவித்தார்.

மேலும் தெலுங்கு நடிகர்களான நானி, நடிகர் ராணாவின் இளைய சகோதரர் அபிராம், தெலுங்கு இயக்குநர்களான சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் உள்ளிட்டப் பலர் மீது செக்ஸ் புகாரை வீசினார், ஸ்ரீரெட்டி. இதற்கு, பலரும் மறுப்புத்தெரிவித்து பேசினர்.

இந்நிலையில் தீவிர லைம்லைட்டில் இருந்த ஸ்ரீரெட்டி, தற்போது சத்தம் இல்லாமல், தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தில் அமர்ந்து, நிறைய வீடியோக்களை யூட்யூப் பக்கம் போட்டு வந்தார். அதில் சமையல், லைஃப் ஸ்டைல், ஃபேஷன் என எண்ணற்ற விஷயங்களை தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்குப் பகிர்ந்து வந்தார்.

சமீபத்தில் முக்கியப்புள்ளிகளை கடுமையாக விமர்சித்த ஸ்ரீரெட்டி:

இந்நிலையில் சமீபத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா, சந்திரபாபு நாயுடுவின் மகன் நர.லோகேஷ் ஆகியோர் குறித்து இவர் வீடியோ மூலம் வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை அரசியல் அரங்கில் கிளப்பியுள்ளன.

இதையடுத்து கர்னூலைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி நாகராஜூ, தெலுங்கு தேசம் கட்சித்தலைவர்கள் மீது ஸ்ரீரெட்டி அவதூறு பரப்பி வருவதாக,கர்னூல் 3ஆவது நகர போலீஸில் ஜூலை 20ஆம் தேதி புகார் செய்தார். அதன்பேரில் ஸ்ரீரெட்டி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடப்பா மற்றும் ஹைதராபாத்திலும் ஸ்ரீரெட்டி மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளனவாம்.

ஹேமா கமிட்டி அறிக்கையால் மீண்டும் விஷாலை சீண்டிய ஸ்ரீரெட்டி:

சமீபத்தில் கேரளாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி சார்பில் மலையாள சினிமாவின் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல், பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இந்த அறிக்கைக்கு பின்னர் மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களான ரஞ்சித், சித்திக் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் விஷாலை தாக்கி பதிவுஒன்றினை இட்டார். அதில் உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த பல பெண்கள் உங்களை விட்டு விலகியது ஏன்? உங்கள் நிச்சயதார்த்தம் நின்றது ஏன்? என்னிடம் ஏராளமான செருப்பு உள்ளது என்று கூறினார்.

நரிக்கதை சொன்ன ஸ்ரீரெட்டி:

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி, பெண்ணின் வாழ்க்கையை நரியுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். அதுபற்றி அவர் இட்ட சமூக வலைதளப் பதிவில், ‘’ ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நரிகளின் கதை இருக்கிறது. பெண்களுக்கு இலக்கு இருக்கிறது. ஆனால், இலக்கு உள்ளவர்களை அவள் ஒரு திமிர் பிடித்தவள், நல்ல குணாதிசயமான பெண் இல்லை என்று மக்கள் சொல்வார்கள். நம் சுற்றுப்புறங்களில் சில நரிகளை கண்டேன். பெண்கள் அந்த நரிகளுக்கு விருந்தளித்து உணவளிக்க வேண்டும்.

ஒரு ஆணைவிட அதிக உழைப்பை பெண்கள் செய்கிறார்கள். ஆனால் பெண்கள், இன்னும் விருந்துகளை கொடுக்க வேண்டும். நிச்சயமாக,பெண்கள் இலக்கை அடையமுயலும்போது, சில ஆண்கள் நரிகளாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஆண் எப்போதுமே ஒரு ஆண். எந்த தவறுசெய்தாலும் அதுபெண்ணின் தவறு எனச்சொல்வார்கள். பெண்களுக்கு மட்டுமே ஒழுக்கம் இருக்கிறது. என்ன ஒரு பரிதாபகரமான உலகம்’’எனத்தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.