Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டி

Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டி

Marimuthu M HT Tamil
Jan 16, 2025 09:21 PM IST

Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டியளித்துள்ளார்.

Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டி
Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டி

மும்பை போனதுக்கு அப்புறம் ரொம்ப நாள் கழிச்சுதான் சென்னை வந்து இருக்கீங்க?

கேப் இல்லைங்க. எங்களுக்கு எப்போது பிள்ளைங்களுக்கு லீவு கிடைச்சாலும் இங்கே நாங்க ஓடி வந்திடுவோம்.

சென்னை அப்படி என்றவுடன் உங்களுக்கு மனதில் வருவது என்ன?

ரொம்ப நினைவுகள். மறக்கமுடியாத நினைவுகள் தான். ஏன்னா, நான் பிறந்ததில் இருந்து சென்னையில் தான் இருந்தேன். பல படங்கள் பண்ணுனேன். நிறைய ஸ்வீட் மெமரிஸ் இருந்தது. அது எனக்கு மறக்கமுடியாதது.

1967ல் துணைவன் படத்தில் முருகனாக நடித்தது ஞாபகம் இருக்கா?

அப்போது நான் மெட்ராஸில் படிச்சிட்டு இருந்தேன். பெரிய பெரிய பேனரில் நான் இருக்கிறதை அப்பா காட்டிட்டு இருந்தார்.

நம் நாடு படத்தில் நல்லபெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளைப் பாடலில் நடித்தது பற்றி?

முந்தியெல்லாம் பட பூஜை ரொம்ப கிராண்ட் ஆகப் பண்ணுவாங்க. இப்போது எல்லாம் தெரியக்கூட தெரியாது. அப்போது எல்லாம் எனக்கு நம்பகூட முடியல. என் பக்கத்தில் எம்.ஜி.ஆர். இருந்தார். அவர் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டார். குட்டி பத்மினியும் என்கூட இருந்தாங்க. காலையில் வந்ததும் Cadbury சாக்லேட் கொடுப்பார்.

ஹீரோயினாக பண்ணுன முதல் படம்?

மூன்று முடிச்சு தான் தமிழில் நான் ஹீரோயினாக நடித்த முதல் படம். அதன்முன்பு, அனுராகாலு என்கிற படத்தில் நடிச்சேன். பாலு மகேந்திரா தான் கேமராமேன்.

மூன்று முடிச்சு படத்தில் நடிச்ச அனுபவம் பற்றி?

நான், ரஜினி எல்லோரும் அப்போது திரைத்துறைக்கு புதியவர்கள். அப்போது கமல்ஹாசன் பெரிய நடிகர். அப்போது கமல்ஹாசன் பெரிய ஆக்டர், நான் எப்போது இப்படி வருவேன் அப்படியெல்லாம் ரஜினி பேசிட்டு இருந்திருக்காங்க. பாலச்சந்தர் சார் சூட்டிங் என்றால் ரொம்பப் பயப்படுவேன். ரொம்ப கோபக்காரர். அந்த வயசில் புரியாது. சேலையெல்லாம் கட்டி, பூவெல்லாம் வைச்சு, பெரிய பொட்டு வைச்சு நடிச்சிருப்பேன். அப்போது எனக்கு 13 வயசு.

சத்யவான் சாவித்திரி என்கிற மலையாளப் படத்தில் கமல் கூட நடிச்சிருந்தீங்க?

சத்யவான் சாவித்திரி படத்தில் நடிக்கும்போது, ஒரு பிளீச்சிங், வேக்ஸிங் எல்லாம் இருக்காது. முடியைப் பார்த்திட்டு, சத்யவான் சாவித்திரி பட செட்டில், சத்யவான் சர்தார்ஜினு கமல் கூப்பிடுவார். பஜ்ஜினு வேறு கூப்பிடுவார்.

நாம் ஒரு குடும்பம் மாதிரி தான் இருந்தோம்?

ஆமா. அப்போது எல்லாம் ஷு போடாமல், பீச்சில் பாவடையை தூக்கி சொருகிட்டு, ஜாகிங் எல்லாம் போவோம்.

கமலோட குரு, கல்யாண ராமன், சிகப்பு ரோஜாக்கள், மீண்டும் கோகிலா, வறுமையின் நிறம் சிகப்பு, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை இதில் கமல்ஹாசன் - ஸ்ரீதேவி ஜோடியை எல்லோரும் பாராட்டுனாங்க. அதோட நினைவுகள் பத்தி சொல்லுங்க?

அதிர்ஷ்டவசமாக மனதில் நிற்பதுபோல் கேரக்டர் நாங்க பண்ணுனோம். பொதுவாக குழந்தை நட்சத்திரமாக இருந்தவங்க ஜெயிச்சது கிடையாதுன்னு சொல்வாங்க. அவர் தன்னை நிரூபிச்சார். ஆஃப் ஸ்கிரீன் நாங்க ரொம்ப பேசிக்கமாட்டோம். படத்தில் கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.

இப்போதுகூட ரஜினியின் பேமிலி ஃபங்ஷன் என்றால் முதல் அழைப்பு உங்களுக்காகத்தான் இருக்கும்? நீங்கள் இரண்டுபேரும் சேர்ந்து காயத்திரி, பிரியா, தர்ம யுத்தம், ஜானி, தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமையில்லை ஆகியப்படங்களில் நடிச்சிருக்கீங்க?

ரொம்ப ஃபுரொபஷனலாக இருப்பாங்க. ரஜினி ரொம்ப ஜாஸ்தி பேசமாட்டார். யோசிச்சிக்கிட்டே இருப்பார். ஒரு சாதாரண சீனை கூட, எல்லோரும் ரசிக்கிற மாதிரி பண்ணியிருவார். நிறைய விஷயங்களை அவர்கிட்ட நான் கத்துக்கிட்டேன். ரொம்ப அமைதியாக இருக்கிறது. யாரைப் பத்தியும் ஜாஸ்தியா பேசுறது கிடையாது. அது எல்லாம் பெரிய தரமான பண்பு’’ எனப்பேசி முடித்தார், ஸ்ரீதேவி.

நன்றி: ஜெயா டிவி

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.