‘அவ்வளவு பஞ்சாயத்த பாத்தாச்சு.. கதறி கெஞ்சினேன்.. வேணாம் என்ன பேச வச்சிராதீங்க’ -நடிகை சோனா பேட்டி!
வெப் சீரிஸ் பண்ணும் போது பெப்சியின் உதவியை நாட முடியாது. ஆனால், நம் ஆட்கள் தானே என்று நம்பினேன்.. ஒவ்வொருவரையும் கெஞ்சினேன்.. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் வந்தது. - நடிகை சோனா பேட்டி!

அஜித் நடித்து, எழில் இயக்கத்தில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக அறியப்படும் சோனா, தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமாகி இருக்கிறார். இந்த நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பான புரோமோஷனில் அவர் பல்வேறு விஷயங்களை பேசி இருக்கிறார்.
தவறுகள் செய்திருக்கிறேன்.
“நான் சில தவறுகள் செய்து இருந்தாலும், அதை திருத்திக் கொண்டு எல்லோருக்கும் உண்மையான வாழ்க்கை வாழ்வதை காட்ட நினைத்தேன். ஆனால் அதுவே தப்பாக போய்விட்டது. ஒருவேளை போலியாக இருந்திருந்தால், நான் நன்றாக இருந்திருப்பேனா என்று எனக்கே தெரியவில்லை.