நடிகை சோனா: ‘படம் எடுக்க பிச்சை எடுத்தேன்… என்ன பண்ணாலும் அடிக்கிறாங்க.. இனியும் பொறுக்க முடியாது’ - நடிகை சோனா பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகை சோனா: ‘படம் எடுக்க பிச்சை எடுத்தேன்… என்ன பண்ணாலும் அடிக்கிறாங்க.. இனியும் பொறுக்க முடியாது’ - நடிகை சோனா பேட்டி!

நடிகை சோனா: ‘படம் எடுக்க பிச்சை எடுத்தேன்… என்ன பண்ணாலும் அடிக்கிறாங்க.. இனியும் பொறுக்க முடியாது’ - நடிகை சோனா பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Updated Mar 09, 2025 04:34 PM IST

நடிகை சோனா: இந்தப் புராஜெக்ட்டை நான் கையில் எடுத்திருப்பது பழிவாங்குவதற்கான எண்ணம் கிடையாது. அதனால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தை மனதில் கொண்டு, அவர்களின் பெயர்களை நான் இதில் சொல்ல விரும்பவில்லை. - சோனா பேட்டி!

நடிகை சோனா: ‘படம் எடுக்க பிச்சை எடுத்தேன்… என்ன பண்ணாலும் அடிக்கிறாங்க.. இனியும் பொறுக்க முடியாது’ - நடிகை சோனா பேட்டி!
நடிகை சோனா: ‘படம் எடுக்க பிச்சை எடுத்தேன்… என்ன பண்ணாலும் அடிக்கிறாங்க.. இனியும் பொறுக்க முடியாது’ - நடிகை சோனா பேட்டி!

ஷார்ட்பிளிக்ஸ் OTT -யுடன் கூட்டணி அமைத்து, தனது யுனிக் புரொடக்சன் Fly High production நிறுவனம் சார்பில், இந்த வெப் சீரிஸை தயாரித்திருப்பதுடன், படத்தின் கதையையும் அவரே எழுதிருக்கிறார்.

இந்த வெப்சீரிஸ் தொடர்பாக அவர் பேசும் போது, ‘ பிரச்சினைகளே வேண்டாம் என்று தான் ஒதுங்கி இருந்தேன். ஆனால், நீ என்ன செய்தாலும் உன்னை அடிப்போம் என்கிற விதமாக, நான் ஒரு ப்ராஜெக்டை தொடங்கியதுமே எதிர்க்கிறார்கள். பயோபிக் என ஆரம்பித்ததுமே ஒரு ஆள், இரண்டு ஆள் இல்லை.. ஒரு கும்பலே எங்கிருந்து வந்து குதித்தார்கள் என தெரியாமல் வந்து எதிர்க்கிறார்கள். 

எனக்கு நன்கு தெரிந்த ஒரு நடிகர், தயாரிப்பாளர் கூட என்னிடம் கடுமை காட்டியது ஏன் என்று தெரியவில்லை. என் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த போது, எனக்குள் அவ்வளவு பயம் இருந்தது. அதன் பிறகும், தொடர்ந்து என் மீதான தாக்குதல் தொடர்கிறது. நான் எவ்வளவு ஒதுங்கிப் போனாலும் என்னை அடிக்கிறீர்கள் என்றால், இனி நான் பேசினால் என்ன ஆகிவிடப் போகிறது என்ற தைரியம் வந்துவிட்டது.

என் தரப்பு நியாயம் 

அப்போது கூட என் தரப்பு நியாயத்தை தான் நான் சொல்ல இருக்கிறேன்.. இந்தப் புராஜெக்ட்டை நான் கையில் எடுத்திருப்பது பழிவாங்குவதற்கான எண்ணம் கிடையாது. அதனால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தை மனதில் கொண்டு, அவர்களின் பெயர்களை நான் இதில் சொல்ல விரும்பவில்லை; நான் எப்போதும் திறந்த மனதுடன் எதையும் பேசுபவள். மனதில் எதையும் வைத்துக் கொள்ள தெரியாது.

எனக்கு மட்டுமே என் பணத்தை வைத்துக்கொள்ள தெரிந்திருந்தால், இந்நேரம் 200 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் இருந்திருப்பேன். எனக்கு தெரிந்த சினிமாவை செய்து அதன் மூலம் வளர நினைத்தேன். என்னை சுற்றி இருப்பவர்களுக்கு ஏன் உதவி செய்தேன் என்றால், எனக்கு வாழ்நாள் முழுவதும் என்னை சுற்றி ஆட்கள் இருக்க வேண்டும்.. உதவி செய்ய வில்லை என்றாலும், உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான்..

தவறுகள செய்திருந்தாலும்

சின்ன சின்ன தவறுகள் செய்திருந்தாலும் அதை திருத்திக் கொண்டு எல்லோருக்கும் உண்மையான வாழ்க்கை வாழ்வதை காட்ட நினைத்தேன்.ஆனால், அதுவே தப்பாக போய்விட்டது. ஒருவேளை போலியாக இருந்திருந்தால், நான் நன்றாக இருந்திருப்பேனா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால், பண்ணாத தவறுகளுக்காக இப்போது நான் கஷ்டங்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். 

நான் செய்த நல்ல விஷயங்களை மறைத்து விட்டார்கள். இப்போது கூட நான் உலகத்தை குற்றம் சாட்ட விரும்பவில்லை. அதேசமயம் நான் தவறு செய்யவில்லை. என் தரப்பு நியாயங்களை கேட்டால், ஒளிவு மறைவாக இல்லாமல் பேசினால், அதுவும் எனக்கு எதிராக திரும்புகிறது. என்னை வாழ விடலாம் இல்லையா?

கவர்ச்சி நடிகை என்கிற என்னுடைய இமேஜை மாற்றும் என சிறுபிள்ளைத்தனமான ஒரு ஆசை இருந்தது. அதனால் ஒரு இயக்குநர் ஆன பின்னர் கூட என்னுடைய சொந்த கதையைத்தான் படமாக எடுக்க முடிவு செய்தேன். 

நான் ஆரம்பத்தில் வெளியிட்ட ஸ்மோக் படத்தின் டீசர் கூட நான் உண்மையைத்தான் சொல்லப் போகிறேன் என்பதை உணர்த்துவதற்காக தான். நெட்பிளிக்ஸ் உடன் ஒப்பிடும்போது ஷார்ட்பிளிக்ஸ் சிறிய OTT தளம் தான் என்றாலும் அவர்கள் கொடுத்த ஆத்மார்த்த ஆதரவுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். 

ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் இதை செய்யாதே, அதை செய்யாதே என்று எதிர்ப்பு வரும் போது, நான் என்னதான் செய்வது ? நான் என்ன அப்படி தப்பான ஆளா என்கிற விரக்தி தான் ஏற்பட்டது. சினிமாவில் ஒன்றும் இல்லாத ஆளாக உள்ளே நுழைந்து வளர்ந்து இன்று ஒரு படத்தின் இயக்குநராக மாறி இருக்கிறேன். இதுவரை இந்த வெப் சீரிஸுக்காக 14 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறேன். முதல் பத்து நாட்கள் நடத்தி முடித்துவிட்டு மீதி நான்கு நாட்கள் படப்பிடிப்பை நடத்த ஆறு மாதம் பிச்சை எடுத்தேன்.

இந்த ‘ஸ்மோக்’ வெப்சீரிசை துவங்கும்போது ஒரு பத்து பேர்களைப் பற்றிய விஷயத்தை, அவர்கள் குடும்பத்தை பாதிக்காதவாறு சொல்வதற்கு திட்டமிட்டேன். ஆனால் அறிவித்து ஒரு வாரம் கூட ஆகவில்லை.. 50 பேரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. அப்போதுதான் தெரிந்தது. இந்த 40 நம்ம பேர் லிஸ்டிலேயே இல்லையே என நினைத்தேன். சில பேர் எனக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறியபோது, நான் என்னுடைய கதையை தான் சொல்லப் போகிறேன்.. நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேட்டேன்.. இன்னும் பத்து பதினைந்து நாட்களுக்குள் இதன் டிரைலர் வெளியாகும்’ என்று பேசினார்.