Sobhita Dhulipala: பிரதமர் மோடிக்கு கொண்டபள்ளி பொம்மையை பரிசளித்த நடிகை சோபிதா துலிபாலா.. உற்சாகப்படுத்திய கணவர்!
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, நடிகை சோபிதா துலிபாலா வெள்ளை மற்றும் தங்க நிற சேலை அணிந்திருந்தார். இந்த சந்திப்பில் அவர் தனக்கு மிகவும் பிடித்த கொண்டபள்ளி பொம்மையை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார்.

தனது திருமணத்துக்குப் பின், நடிகர் நாகசைதன்யா அவரது மனைவி சோபிதா துலிபாலாவுடன் பிரதமர் மோடியைச் சந்தித்து நினைவுப்பரிசினை வழங்கியிருக்கின்றனர்.
தெலுங்கு திரையுலகில் கிங் நடிகர் என்று அழைக்கப்படுவபர் நாகார்ஜுனா. இவர் தனது மூத்த மகன் நடிகர் நாக சைதன்யா மற்றும் மருமகள் நடிகை சோபிதா துலிபாலாவுடன் பிப்ரவரி 8ஆம் தேதி, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அவர்களுடன் நாகார்ஜுனாவின் மனைவி அமலா அக்கினேனியும் சென்றிருந்தார்.
நாகார்ஜுனாவின் தந்தை நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரைப் பற்றி, டாக்டர் யர்லகட்டா லட்சுமி பிரசாத் எழுதிய ’அக்கினேனி கா விராட் வியாக்தித்வா’ என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
நடன பொம்மைகளை பரிசளித்த சோபிதா துலிபாலா:
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் நடிகை சோபிதாவும்; நடிகர் நாக சைதன்யாவும் கூட்டாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளனர்.
அதில், அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பிரதமர் மோடியுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
அதில் ஒரு புகைப்படத்தில், நடிகை சோபிதா, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்போல், ஆந்திராவின் நடன பொம்மைகளான கொண்டபள்ளி நடன பொம்மைகளை பிரதமர் மோடிக்கு வழங்குவதைக் காண முடிந்தது.
அப்போது நாக சைதன்யா புன்னகையுடன் அவள் அருகில் நின்றார். இந்த சந்திப்பின்போது, நடிகை சோபிதா வெள்ளை மற்றும் தங்க நிற சேலையிலும், நடிகர் நாக சைதன்யா கருப்பு பந்த்லா மற்றும் பேண்ட்டிலும் காணப்பட்டனர்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் எழுதிய நடிகை சோபிதா, ‘’என்னை அறிந்த எவருக்கும் கொண்டபள்ளி பொம்மைகளை (நடனமாடும் பொம்மைகள்) நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது தெரியும். அவற்றின் நினைவுகள் தெனாலியில் உள்ள எனது தாத்தா, பாட்டி வீட்டில் எனது குழந்தை பருவத்தில் தொடங்கின.
அப்படிப்பட்ட ஒன்றை பிரதமருக்கு பரிசளிக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்த கைவினைப்பொருளின் பூர்வீகம் ஆந்திரா என்பது பிரதமருக்கு தெரியும் என்பது மிகவும் மகிழ்ச்சி, "என்று அவர் தனது குறிப்பை முடித்தார்.
நன்றி பகிர்ந்த நாக சைதன்யா மற்றும் சோபிதா:
இந்த பதிவைப் பகிர்ந்த நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா, "நாடாளுமன்ற வளாகத்தில் எங்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவ் பற்றி டாக்டர் யர்லகட்டா லட்சுமி பிரசாத் எழுதிய ‘அக்கினேனி கா விராட் வியாக்தித்வா’ என்ற புத்தகத்தை வெளியிடுவது ஒரு மரியாதை ஆகும். இந்த புத்தகம் அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் சினிமா பாரம்பரியத்திற்கு அஞ்சலி செலுத்துகிறது.
அவரது வாழ்நாள் பற்றிய படைப்புக்கு நீங்கள் அளித்த அங்கீகாரம் எங்கள் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், இந்திய சினிமா ஆர்வலர்களுக்கும் கிடைத்த பொக்கிஷமான உறுதிமொழி ஆகும்’’ என நடிகர் நாகசைதன்யா, தனது மனைவி சோபிதாவுடன் சேர்ந்து கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க: தனது தந்தையைப் பற்றி பேசிய நாகார்ஜூனா
மேலும் படிக்க: புதிய நாகார்ஜூனா நடித்த படம்
நடிகர் நாகார்ஜூனாவின் பதிவு:
மற்றொரு பதிவில் பிரதமர் மோடியுடன் தானும் தனது மனைவி அமலாவும் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள நடிகர் நாகார்ஜூனா, " ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான ஒரு முக்கிய நிறுவனமாக, அக்கினேனி நாகேஸ்வர ராவ் தோற்றுவித்த அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் விளங்குகிறது. மேலும், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் அன்னபூர்ணா திரைப்பட மற்றும் ஊடகக் கல்லூரி ஆகிய இரண்டிற்கும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டுகளைக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் நம்மை பெருமையுடனும் நன்றியுடனும் நிரப்புகிறது’’ என நாகார்ஜூனா பகிர்ந்தார்.
மேலும் படிக்க: நாகார்ஜூனா பதிவு செய்த வாக்குமூலம்
பிரதமர் தந்த அங்கீகாரம்:
2024ஆம் ஆண்டின் தனது கடைசி மான் கி பாத் உரையில், பிரதமர் மோடி இந்திய சினிமாவின் நான்கு சின்னங்களான ராஜ் கபூர், முகமது ரஃபி, அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் தபன் சின்ஹா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி தனது உரையில் நாகேஸ்வர ராவை புகழ்ந்தார்.
குறிப்பாக,"அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்கள் தெலுங்கு சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். அவரது படங்கள் இந்திய பாரம்பரியத்தையும் மதிப்புகளையும் மிகச் சிறப்பாக வழங்கின" என்று பிரதமர் மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்