Actress Sneha: அட சிநேகாவ பாத்து இப்படி சொல்லிட்டாங்களே.. வருத்தத்தில் சிநேகா எடுத்த முக்கிய முடிவு..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Sneha: அட சிநேகாவ பாத்து இப்படி சொல்லிட்டாங்களே.. வருத்தத்தில் சிநேகா எடுத்த முக்கிய முடிவு..

Actress Sneha: அட சிநேகாவ பாத்து இப்படி சொல்லிட்டாங்களே.. வருத்தத்தில் சிநேகா எடுத்த முக்கிய முடிவு..

Malavica Natarajan HT Tamil
Published Apr 08, 2025 06:00 AM IST

Actress Sneha: நடிகை சிநேகா ஒரே உடையை திரும்ப அணிந்ததால் ஏற்பட்ட அவமானம் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

Actress Sneha: அட சிநேகாவ பாத்து இப்படி சொல்லிட்டாங்களே.. வருத்தத்தில் சிநேகா எடுத்த முக்கிய முடிவு..
Actress Sneha: அட சிநேகாவ பாத்து இப்படி சொல்லிட்டாங்களே.. வருத்தத்தில் சிநேகா எடுத்த முக்கிய முடிவு..

நடிகை சிநேகா தான் பயன்படுத்தும் உடைகள் பற்றியும் அவர் எப்படி தனக்கான உடைகளை தேர்ந்தெடுக்கிறார் என்பது பர்றியும் சில ஆண்டுகளுக்கு முன் கலாட்டா மீடியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பார். அந்தப் பேட்டியில் தான், அவர் ஒருமுறை பயன்படுத்தி உடைகளை மறுபடி பயன்படுத்த மாட்டார் என்றும் அதற்கான காரணம் என்ன என்றும் கூறியுள்ளார்.

என்ன பாத்து அப்படி சொல்லிட்டாங்க

அந்தப் பேட்டியில் பேசி நடிகை சிநேகா, "நான் ஒருமுறை யூஸ் பண்ண ட்ரெஸ்ஸ மறுபடியும் யூஸ் பண்ண மாட்டேன். நான் ஒருமுறை போட்ட ட்ரெஸ்ஸ மறுபடியும் போட்டுட்டு ஒரு நிகழ்ச்சிக்கு போனேன். அப்போ ஒரு நியூஸ் பேப்பர்ன்னு நினைக்குறேன் எனக்கு சரியா நியாபகம் இல்ல. அவங்க வந்து சிநேகாவுக்கு போடுறதுக்கு ட்ரெஸ் இல்ல போல. அதுனால தான் போட்ட ட்ரெஸ்ஸையே திரும்ப போட்டுட்டு இருக்காங்கன்னு நியூஸ் போட்டாங்க.

அப்போ முடிவு பண்ணிட்டேன்

அன்னைல இருந்து நான் ஒருமுறை போட்ட ட்ரெஸ்ஸ அடுத்த முறை போட கூடாதுன்னு முடிவெடுத்தேன். இத்தனைக்கும் நான் அந்த 2 நிகழ்ச்சிக்கு மட்டும் தான் ஒரே ட்ரெஸ் போட்டேன்.. அதுக்கே இப்படி எழுதிட்டாங்க. எனக்கு சல்வார் கமிஸ்ன்னா ரொம்ப பிடிக்கும். அந்த ட்ரெஸ்ஸ நான் ஹைதராபாத்ல வாங்குனேன். அத நான் மறுபடியும் போடும் போது எனக்கு எதுவும் பெருசா தெரியல. ஆனா அத ஒரு விஷயமா பேசுனதுனால தான் இந்த முடிவு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா எடுத்தேன்.

ட்ரெஸ்ல ரொம்ப கவனமா இருப்பேன்

நான் போடுற ட்ரெஸ் எல்லாம் என் பிரண்ட்ஸ் கிட்ட, யாருக்காவது தேவை படுறவங்ககிட்ட கொடுத்துடுவேன். இத்தனைக்கும், நான் எடுக்குற எல்லா ட்ரெஸ்ஸும் ரொம்ப விலை அதிகம். நான் என்ன ட்ரெஸ் போடுறேங்குறதுல நான் ரொம்பவே கவனமா இருப்பேன். ஏன்னா அத வச்சு தான் மக்கள் என்ன பாப்பாங்க. துணியோட மெட்டீரியல பாத்து பாத்து எடுப்பேன். எல்லாமே ஹை- குவாலிட்டிய இருந்தாலும் நான் அத ரெண்டாவது முறை யூஸ் பண்ண மாட்டேன்.

இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்

அதுமட்டும் இல்லாம நான் ஒருமுறை போடுற ட்ரெஸ் எல்லாம் என் கபோர்டுல அப்படியே தான் இருக்கு. இதனால என்னோட கபோர்டு பெருசாகிட்டே இருக்கு. 365 நாளுக்கு 365 ட்ரெஸ்னா என்ன பண்றது. இப்போ என் கபோர்ட்ல ஃபுல்லா பாத்தீங்கன்னா சல்வார் கமீஸ், சேலைங்க தான் இருக்கு. இப்போதைக்கு எனக்கு மஞ்சள் கலர், பச்சை கலர், நீலக் கலர் எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

அம்மா சாப்பாடு தான்

இப்போ நான் வெஜிட்டேரியனா மாறிட்டு வர்றேன். அதுனால அம்மா கையால என்ன செஞ்சு கொடுக்குறாங்களோ அத ரொம்ப விரும்பி சாப்பிடுவேன். நான் இதுவரைக்கும் வெளியில வெஜ் சாப்பாடு எதுவும் சாப்பிட்டது இல்ல. அதுனால நான் அம்மா கையால செஞ்சி கொடுக்குறத சேஃப்பா நினைக்குறேன்.

நான் இப்போ அதிகமா யோகா செய்யுறேன். சூரிய நமஸ்காரம் பண்றதால நிறைய யூஸ் இருக்கு. உடம்பு ரொம்ப ஆரோக்யமா இருக்க மாதிரி இருக்கு.

யோகாவுல ரிசல்ட்

நான் ஆரம்பத்துல யோகா எல்லாம் பண்ணல. நான் யோகா பத்தி படிச்சதுக்கு அப்புறம் தான் இத ட்ரை பண்ணேன். நல்ல ரிசல்ட் கிடைக்குது. சூரிய நமஸ்காரம் பண்றதால முகம் எல்லாம் பளபளன்னு ஆகுது. ரத்த ஓட்டம் நல்லா இருக்கு. அதே சமயம் நான் அதிகம் பழங்கள் எல்லாம் சாப்பிட ஆரம்பிச்சிருக்குறதால எனக்கு இன்னும் அதிக பலன் கிடைச்ச மாதிரி தெரியுது. இதுனாலயே நான் கொஞ்சம் கலர் ஆன மாதிரி இருக்கேன் " என்றார்.

நடிகை சிநேகா

நடிகை சிநேகா நடிகர் பிரசன்னைவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பின்னும் நடித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது சிநேகா சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.