'டப்பா ரோலில் நடிப்பதற்கு ஆண்டி ரோல் எவ்வளவோ மேல்'.. கிண்டலுக்கு நச் ரிப்ளை கொடுத்த நடிகை சிம்ரன்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'டப்பா ரோலில் நடிப்பதற்கு ஆண்டி ரோல் எவ்வளவோ மேல்'.. கிண்டலுக்கு நச் ரிப்ளை கொடுத்த நடிகை சிம்ரன்..

'டப்பா ரோலில் நடிப்பதற்கு ஆண்டி ரோல் எவ்வளவோ மேல்'.. கிண்டலுக்கு நச் ரிப்ளை கொடுத்த நடிகை சிம்ரன்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 20, 2025 02:00 PM IST

நடிகை சிம்ரன் தன்னை ஆண்டி ரோலில் நடிக்கும் நடிகை என கிண்டல் செய்த சக நடிகைக்கு காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

'டப்பா ரோலில் நடிப்பதற்கு ஆண்டி ரோல் எவ்வளவோ மேல்'.. கிண்டலுக்கு நச் ரிப்ளை கொடுத்த நடிகை சிம்ரன்..
'டப்பா ரோலில் நடிப்பதற்கு ஆண்டி ரோல் எவ்வளவோ மேல்'.. கிண்டலுக்கு நச் ரிப்ளை கொடுத்த நடிகை சிம்ரன்..

சக நடிகையின் விமர்சனம்

இருப்பினும் அதனை தனக்கே உரித்தான பாணியில் ஸ்கோர் செய்து வரும் நிலையில், தற்போது சில முன்னணி கதாப்பாத்திரங்களிலும் கெஸ்ட் ரோலிலும் நடித்து வருகிறார். இந்த சமயத்தில் அவர், சமீபத்தில் சக நடிகையால் ஏற்பட்ட மன வருத்தத்தை விருது நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து அதற்கு பதிலடியும் கொடுத்துள்ளார். அப்போது, தான் ஆண்டி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக நடிகை விமர்சித்ததாக கூறினார்.

இது தான் பெட்டர்

நிகழ்ச்சியில் பேசிய சிம்ரன், " நான் சமீபத்தில் என்னுடைய சக நடிகை ஒருவரிடம் நீங்கள் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள். இந்தப் படத்தில் நீங்கள் நடித்தது என ஆச்சரியமாக இருந்தது எனக் கூறினேன். அப்போது அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னைப் பார்த்து, உங்களைப் போல ஆண்டி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை விட இது பெட்டர் தான் என்றார்.

இந்தப் பதில் என்னை ரொம்பவே அதிர்ச்சி அடையச் செய்தது. அவர் இப்படி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. எனக்கு சற்றே நல்ல பதில் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

25 வயதிலே ஆண்டி ரோல்

மேலும் பேசிய அவர், நான் எனக்கு 25 வயது இருக்கும் போதே கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் நீங்கள் சொன்ன ஆண்டி கதாப்பாத்திரத்தில் நடித்துவிட்டேன். இது படத்தில் டப்பா ரோலில் நடிப்பதற்கு எவ்வளவோ மேலானது. இப்படி முக்கிய ஆண்டி கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம். இல்லை என்றால் சும்மாவே இருக்கலாம் என்று தான் நான் நினைக்குறேன்.

உறுதியாக உள்ளேன்

நான் என்ன செய்கிறேன் என்பதில் நான் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். நான் பாலின பாகுபாடு பற்றி எல்லாம் பேச விரும்பவில்லை. நான் பெண்ணாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஆண்டி ரோலோ, அம்மா ரோலோ அல்லது வேறு எந்த ரோலாக இருந்தாலும் அது முக்கியமானதாக இருக்கும் என காட்டமாக கூறினார்.

சிம்ரனின் படங்கள்

நடிகை சிம்ரன் தற்போது தியேட்டர்களில் சக்கை போடு போட்டு வரும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அத்துடன் இவர் நடிகர் சசிகுமாருடன் சேர்ந்து டூரிஸ்ட் பேமிலி எனும் படத்திலும் நடித்துள்ளார். இதன் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை சிம்ரன் தற்போது தி லாஸ்ட் ஒன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லோகேஷ் குமார் என்பவர் இயக்கி வருகிறார்.