'இப்படி ஒரு படம் ரொம்ப நாளுக்கு பின் வந்திருக்கு..' டூரிஸ்ட் ஃபேமிலியில் சிரிப்புக்கு கேரண்டி தரும் சிம்ரன்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'இப்படி ஒரு படம் ரொம்ப நாளுக்கு பின் வந்திருக்கு..' டூரிஸ்ட் ஃபேமிலியில் சிரிப்புக்கு கேரண்டி தரும் சிம்ரன்..

'இப்படி ஒரு படம் ரொம்ப நாளுக்கு பின் வந்திருக்கு..' டூரிஸ்ட் ஃபேமிலியில் சிரிப்புக்கு கேரண்டி தரும் சிம்ரன்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 26, 2025 11:54 AM IST

நடிகை சிம்ரன் தனது புதிய திரைப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஆர்வமாக பேசியிருக்கிறார்.

'இப்படி ஒரு படம் ரொம்ப நாளுக்கு பின் வந்திருக்கு..' டூரிஸ்ட் ஃபேமிலியில் சிரிப்புக்கு கேரண்டி தரும் சிம்ரன்..
'இப்படி ஒரு படம் ரொம்ப நாளுக்கு பின் வந்திருக்கு..' டூரிஸ்ட் ஃபேமிலியில் சிரிப்புக்கு கேரண்டி தரும் சிம்ரன்..

அவர் இப்போது சசிகுமாருடன் இணைந்து நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சிம்ரன் ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் பேசுகையில், தனது தொழில் வாழ்க்கையைப் பற்றி அவர் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.

டூரிஸ்ட் ஃபேமிலி பற்றி

அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து அவர் கூறுகையில், “இந்த திரைப்படம் நகைச்சுவையுடன் கூடிய குடும்ப நாடகம் என்பது என்னை மிகவும் கவர்ந்தது. நிறைய நகைச்சுவை இருப்பதால், இது பார்வையாளர்களை நன்றாக சென்றடையும். குடும்ப பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்து சிரித்துக்கொண்டே வெளியே வந்து திரைப்படத்தைப் பற்றி பேசும்போது, ​​படக்குழுவினரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துவிட்டது என்று அர்த்தம். இதுபோன்ற ஒரு தமிழ் திரைப்படம் நீண்ட காலத்திற்குப் பிறகு வெளியாகியுள்ளது.

எல்லாம் இருக்கிறது

திரைப்படத்தின் பின்னணியில் உள்ள குழுவினர் அனைவரும் இளைஞர்கள், மேலும் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். எனது சக நடிகர் சசிகுமார் ஒரு இயக்குனராகவும், நல்ல, நுட்பமான நடிகராகவும் இருக்கிறார். இந்த திரைப்படத்தில் உணர்ச்சி, காதல், நகைச்சுவை, நாடகம் என அனைத்தும் கலந்திருக்கிறது, இது மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”

திரைக்கதை தான் பெஸ்ட்

பேட்ட படத்திற்கு பின் நடிகையாக தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வந்தாலும், அவர் தேர்ந்தெடுத்து மட்டுமே படங்களில் நடிக்கிறார். “திரைக்கதைதான் எல்லாவற்றிற்கும் முதன்மையானது. ஒரு நல்ல திரைக்கதை மட்டுமே என்னை ஒரு படத்தில் நடிகக் கையெழுத்திட வைக்கிறது. ஒரு பிரபலமான நடிகர், தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் என்பதற்காக நான் ஒருபோதும் திரைப்படத்தில் கையெழுத்திடுவதில்லை.

இவர்களோடு வேலை செய்ய விரும்பவில்லை..

சில நேரங்களில் கதாபாத்திரங்கள் சரியாக அமையாததாலோ அல்லது நல்ல சம்பளம் தராததாலோ திரைப்படங்களை விட்டுவிட வேண்டியிருக்கும். சிலர் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதன் மூலம் எங்களுக்கு ஒரு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு குறைந்த ஊதியம் தருகிறார்கள் - நான் அப்படிப்பட்டவர்களை விரும்புவதில்லை, அவர்களுடன் வேலை செய்ய விரும்பவில்லை,” என்று சிம்ரன் வெளிப்படையாக கூறுகிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.