Shruthi Haasan: இதெல்லாம் போதும்.. விழா மேடையில் கிளாஸ் எடுத்த ஸ்ருதி ஹாசன்.. வாயடைத்துப் போன பிரபலங்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shruthi Haasan: இதெல்லாம் போதும்.. விழா மேடையில் கிளாஸ் எடுத்த ஸ்ருதி ஹாசன்.. வாயடைத்துப் போன பிரபலங்கள்!

Shruthi Haasan: இதெல்லாம் போதும்.. விழா மேடையில் கிளாஸ் எடுத்த ஸ்ருதி ஹாசன்.. வாயடைத்துப் போன பிரபலங்கள்!

Malavica Natarajan HT Tamil
Jan 19, 2025 06:59 AM IST

Shruthi Haasan: விருது வழங்கும் விழாவில் தன்னை எப்படி அழைக்க வேண்டும் தனத்து எது பிடிக்கும் என்பது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் பேசியுள்ளார்.

Shruthi Haasan: இதெல்லாம் போதும்.. விழா மேடையில் கிளாஸ் எடுத்த ஸ்ருதி ஹாசன்.. வாயடைத்துப் போன பிரபலங்கள்!
Shruthi Haasan: இதெல்லாம் போதும்.. விழா மேடையில் கிளாஸ் எடுத்த ஸ்ருதி ஹாசன்.. வாயடைத்துப் போன பிரபலங்கள்!

அவர்டு இல்ல ரிவார்டு

லிருதைப் பெற்றுக் கொண்டு பேசிய ஸ்ருதி ஹாசன், இது அவார்ட் இல்ல ரிவார்டுன்னு நடிகர் ஒருத்தர் சொன்னாரு. எனக்கு இந்த சிஸ்டர் ஹூட் மேல எல்லாம் நம்பிக்கை இருக்கு என்றார்.

சின்ன வயசுல இருந்து நடிக்குறீங்க, காஸ்ட்டியூம் அசிஸ்டென்டா இருக்கீங்க, சிங்கர், மியூசிக் கம்போஸர் ,நடிகர்ன்னு உங்கள ஒரு கட்டத்துக்குள்ள அடைக்க முடியாது. உங்களுக்கு ஸ்ருதி ஹாசனை எப்படி சொல்லி கூப்பிட்டா பிடிக்கும்ன்னு தொகுப்பாளர்கள் கேட்டனர்.

என்ன இப்படி சொன்னா போதும்

அதற்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன், என்னை மேடம்ன்னு சொல்ல வேணாம். ஸ்ருதின்னு சொன்னா போதும். எனக்கு என்ன சுத்தி இருக்கவங்க என்ன ஒரு நல்ல ஹியூமன் பீயிங்ன்னு சொன்னாலே போதும். மத்தவங்க சொல்லலன்னா பரவாயில்ல எனக் கூறினார்.

கூலி அப்டேட்

கூலி படத்தின் படப்பிடிப்பு நல்லா போயிட்டு இருக்கு. படத்துக்காக எல்லாரும் அவங்களோட ஹார்டு வொர்க் கொடுக்குறோம். நிச்சயம் படம் எல்லாருக்கும் பிடிக்கும். அவங்க மனச தொடுற மாதிரி படமா இது இருக்கும். மத்தபடி என்னால எக்ஸ்க்ளூசிவ்வா எந்த தகவலும் தர முடியாது என்றார்.

சினிமாவைத் தாண்டி பல விஷயங்கள்ல அப்பா மாதிரி அப்டேட் ஆகிட்டே இருக்கும் ஸ்ருதி ஹாசன் தனக்கு ஜென்சி (genz) வார்த்தைகள் கற்பது கடினமாகவும் சவாலாகவும் இருப்பதாக கூறினார்.

டீச்சர் ஆன ஸ்ருதி

அபப்டி கூறி. அவருக்கு தொகுப்பாளர்கள் கீர்த்தியும், ராஜ் மோகனும் சேர்ந்து சில ஜென்சி வார்த்தைகளை திரையில் காட்டி அதன் அர்த்தத்தை கூறுமாறு கேட்டனர். முதலில் தயங்கிய ஸ்ருதி ஹாசன், பின் அந்த வார்த்தைகளுக்கு தனக்கு தெரிந்த அர்த்தங்களை கூறினார்.

முதல் வார்த்தையாக திரையில் காட்டப்பட்டது TEA. அப்படி என்றால் அது கிசுகிசுவாம். இந்த வார்த்தை அவருக்கே தெரியுமாம். ஆனல் தற்போது தனக்கு காசிப் எல்லாம் வேண்டாம் எனக் கூறிலிட்டார்.

அல்பத் தனமானது.

CHAD என்ற ஸ்லைட் காட்டப்பட்டது. இதற்கு ஸ்ருதி ஹாசன் தனக்கு அர்த்தம் தெரியாது எனக் கூறினார். பின் இதுகுறித்து விளக்கமளித்த ராஜூ மேகன், சாட் என்றால் அல்பத்தனமானது என விளக்கம் அளித்தார்.

FLEX என்ற வார்த்தைக்கு திறமையை வெளிக் கொண்டு வருவது என அர்த்தமாம். தனித்திறமைகள் எல்லாம் வெளிய கொண்டு வரவேண்டும் என்று அதற்கு அர்த்தம் எனக் கூறினார்.

STAN என்ற வார்த்தைக்கு சூப்பர் பேன் என அர்த்தம். அதாவது வெறித்தனமான ரசிகன் என்றும் அதனை சொல்லலாம் எனக் கூறினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.