'என்னைப் பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியாது.. வாழ்க்கை எப்படி வேணாலும் மாறும்' வேதனையை பகிர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசன்..
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது பெற்றோர்களான கமல்ஹாசனையும் சரிகாவையும் பிரிந்து வாழ்ந்த காலங்களைப் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது பெற்றோர்களான கமல்ஹாசனையும் சரிகாவையும் பிரிந்து வாழ்ந்த காலங்களைப் பற்றி மனம் திறந்து பேசினார். ஃபிலிம்ஃபேர் உடனான ஒரு நேர்காணலில், நடிகர்களின் குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் என்பதால் தான் ஒருபோதும் 'நடிப்பதகற்கான உரிமை பெற்றவராக' உணரவில்லை என்று ஸ்ருதி ஹாசன் கூறி இருக்கிறார்.
நடிக்க உரிமை பெறவில்லை
நேர்காணலின் போது, ஸ்ருதியிடம், சினிமாவில் வளர்ந்து வரும் ஒருவராக உள்ளதால் சலுகை பெற்றதாகவும் நடிகர்கள் குடும்பத்தில் இருந்து வந்ததால் நடிக்க உரிமை பெற்றதாகவும் நீங்கள் எப்போதாவது உணர்ந்தீர்களா என்று கேட்டனர். அப்போது, அவர், "நிச்சயமாக இல்லை, ஏனென்றால் நான் திரைப்படத் துறையில் சேருவதற்கு முன்பு எனக்கு என்ன நடந்தது என்று பலருக்குத் தெரியாது. என் பெற்றோரின் பிரிவால் வாழ்க்கை என்னைத் மிகவும் மோசமாக வைத்திருந்தது என்றார்.