‘அவ்வளவு பேர் வர்றாங்க.. நீங்க மட்டும் லேட்டா வருவீங்களான்னு… காட்டமான மணி… கடுப்பில் ரஜினி செய்த சம்பவம்! - ஷோபனா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அவ்வளவு பேர் வர்றாங்க.. நீங்க மட்டும் லேட்டா வருவீங்களான்னு… காட்டமான மணி… கடுப்பில் ரஜினி செய்த சம்பவம்! - ஷோபனா!

‘அவ்வளவு பேர் வர்றாங்க.. நீங்க மட்டும் லேட்டா வருவீங்களான்னு… காட்டமான மணி… கடுப்பில் ரஜினி செய்த சம்பவம்! - ஷோபனா!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 28, 2024 09:12 AM IST

ரஜினி சார் மட்டும் மணி சாரிடம் சென்று, நான் மட்டும் கொஞ்சம் தாமதமாக வருகிறேன் என்று சொன்னார். அதற்கு மணிசார் 300 பேர் அந்த அதிகாலை காட்சிக்கு வரும்பொழுது, 301 வது ஆளான நீங்களும் வரவேண்டும் என்று மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார். - ஷோபனா!

 ‘அவ்வளவு பேர் வர்றாங்க.. நீங்க மட்டும் லேட்டா வருவீங்களான்னு… காட்டமான மணி… கடுப்பில் ரஜினி செய்த சம்பவம்! - ஷோபனா!
‘அவ்வளவு பேர் வர்றாங்க.. நீங்க மட்டும் லேட்டா வருவீங்களான்னு… காட்டமான மணி… கடுப்பில் ரஜினி செய்த சம்பவம்! - ஷோபனா!

அதிகாலை மோகம்

இது குறித்து அவர் பேசும் போது, ‘மணி சார் இப்போது கோபப்படுவது போல அப்போது கோபப்பட மாட்டார். ஆனால், நாம் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லி விடுவார். மணி சாருக்கு சாருக்கு அதிகாலையில் படப்பிடிப்பு நடத்துவது மிக மிக பிடிக்கும். அதிகாலை நேரத்தில் காட்சிகளை எடுப்பதில் அவருக்கு அப்படி மோகம் இருந்தது.

மணிரத்னம்
மணிரத்னம்

அவரது படங்களிலும், அதிகாலைத் தொடர்பான காட்சிகள் அதிகமாக இடம்பெற்று இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில், ஒரு நாள் தளபதி படத்திலும், அதே போல அதிகாலை காட்சி ஒன்றை எடுக்க வேண்டும் என்று கூறி, எல்லோரையும் அடுத்த நாள் காலையிலேயே வரச்சொன்னார் மணிரத்னம்.

ஆனால், ரஜினி சார் மட்டும் மணி சாரிடம் சென்று, நான் மட்டும் கொஞ்சம் தாமதமாக வருகிறேன் என்று சொன்னார். அதற்கு மணிசார் 300 பேர் அந்த அதிகாலை காட்சிக்கு வரும்பொழுது, 301 வது ஆளான நீங்களும் வரவேண்டும் என்று மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார். இதையடுத்து ரஜினி சார் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார்.

சிவப்பு கலர் லைட்

நாங்கள் எல்லாம் அடுத்த நாள் காலை 2 மணிக்கே எழுந்து, தூக்க கலக்கத்தில் மைசூரில் இருந்து உள்ளே இருக்கும் அந்த மலைக்கு சென்று கொண்டிருந்தோம். நாங்கள் அங்கு சென்று கொண்டிருக்கும் போதே, அந்த மலையில் ஒரு சிவப்பு கலர் லைட் எரிந்து கொண்டிருந்தது. அங்கு ரஜினி சார் உட்கார்ந்து இருந்தார். அவர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த முதல்நபர். ரஜினி சார் அவ்வளவு ஒழுக்கமாக பணியை செய்து கொடுத்தார். மணி சார் அப்படியான ஒரு கட்டுப்பாட்டை அவரது படப்பிடிப்பில் வைத்திருந்தார்’ என்று பேசினார்.

 

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

முன்னதாக, தளபதி படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் முரளி அப்பாஸ் குமுதம் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலாம்.

இது குறித்து அவர் பேசும் போது, “நடிகர் ரஜினிகாந்த் அந்த சமயத்தில் மார்க்கெட்டில் நம்பர் ஒன் நடிகராக இருந்த போதும், அவர் ஒரு இளம் நடிகராக, கற்றுக்கொள்ளும் இடத்தில் இருந்தார். மணிரத்னம் ‘அஞ்சலி’ என்ற படத்தை அப்போது இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், ரஜினி மணிரத்னத்தை குறிப்பிட்டு, இரண்டு வயது குழந்தையை நீங்கள் இப்படி நடிக்க வைத்திருக்கிறீர்களே..

கோரிக்கை வைத்த ரஜினி:

தயவுசெய்து நீங்கள் என்னையும் வைத்து ஒரு படம் எடுங்கள் என்று மிகவும் தாழ்மையாக கேட்டுக் கொண்டார். அவர் அப்படி கேட்டதுதான் ‘தளபதி’ என்ற படமாக மாறியது. அந்த சமயத்தில் மற்ற படங்களிலெல்லாம் அவரை, மாலை 6 மணிக்கெல்லாம் அனுப்பி விடுவார்கள். அவர் செட்டிற்கு வந்தால், அவருடைய காட்சிகளை முதலில் எடுத்து விட்டு தான், மற்றவர்களுக்கான காட்சிகளை எடுப்பார்கள்.

 

அப்படி ரஜினி பீக்கில் இருந்த சமயம் அது. மணிரத்னம், ஊட்டியில் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற பாடலை, காலை 5 1/2 மணிக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.அது டிசம்பர் மாதம் வேறு கடுமையான குளிர், இருந்த போதும் ரஜினி போர்வையை சுற்றிக்கொண்டு எல்லோருக்கும் முன்னர் அங்கு வந்து அமர்ந்திருப்பார். அந்த படத்தில் அவர் அவ்வளவு சின்சியராக வேலை செய்தார்.

ரஜினி நடிக்க முடியாமல் சிரமப்பட்டது:

அந்தப் படத்தில் மணிரத்னம் எடுக்கும் காட்சிகளில், அவர் எதிர்பார்த்தபடி ரஜினியால் நடிக்க முடியாமல் சிரமப்பட்டது உண்மைதான். அதனை தொடர்ந்துதான் அவர் கமலிடம் போன் செய்து, மணிரத்னத்தை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று புலம்பினார். அந்த படப்பிடிப்பு நடந்த சமயத்தில் சொல்லும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

மைசூரில் கே ஆர்சன் என்ற ஒரு ரவுண்டானா இருக்கிறது. அங்கு நாங்கள் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி கொண்டிருந்தோம். காட்சியின் படி, ரஜினிகாந்த் ஒரு காவல் அதிகாரியின் கையை வெட்ட வேண்டும். அதன் படிக்கட்டில் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். திடீரென்று ரஜினி மணிரத்னத்தை அழைத்து, மணி சார் நான் இந்த இடத்தில் தூங்கி இருக்கிறேன் என்று கூறினார்.

ரஜினி செய்த சம்பவம்:

உடனே, அவர் எப்படி என்று கேட்க, நான் கண்டக்டராக இருக்கும் பொழுது, பஸ்ஸை ஓட்டி முடித்துவிட்டு, இங்குதான் வந்து படுப்போம் என்று கூறினார். அவர் சொல்லிவிட்டு காட்சியில் நடிக்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து மணி சார் என்னிடம், என்ன இவர் இங்கு படுத்து இருக்கிறார் என்று சொல்கிறார் என்று கேட்டார். உடனே நான் நிச்சயம் படுத்திருப்பார் சார் என்று சொன்னேன்.

எப்படி என்று கேட்க, நாம் ஷூட்டிங் எடுப்பதற்கு முன்னதாக, இந்த இடத்தில் 7 பேர் படுத்திருந்தார்கள். அவர்களை எழுப்பி விட்டு தான் நாம் தற்போது ஷூட்டிங் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன்.அன்று மாலை வெளிவந்த பேப்பரில், ரஜினியின் படப்பிடிப்பால் சாலையில் போக்குவரத்து நெரிசல் என்று செய்தி வந்தது. அந்த இடத்தில் படுத்திருந்த மனிதனுக்கு, இந்த இடத்திற்கு வருவோம் என்று தெரியாது. வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானது” என்று பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.