Sherin Father: ‘இறந்து ஒரு வாரம் ஆயிடுச்சு..’ தந்தை மறைவால் கடுமையாக வாடும் ஷெரின்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sherin Father: ‘இறந்து ஒரு வாரம் ஆயிடுச்சு..’ தந்தை மறைவால் கடுமையாக வாடும் ஷெரின்!

Sherin Father: ‘இறந்து ஒரு வாரம் ஆயிடுச்சு..’ தந்தை மறைவால் கடுமையாக வாடும் ஷெரின்!

Aarthi Balaji HT Tamil
Jun 06, 2024 10:51 AM IST

Sherin Father: நடிகை ஷெரினின் தந்தை கடந்த ஒரு வாரம் முன்பாக உயிர் இழந்து உள்ளார். ஆனால் அவருக்கு அது தாமதமாகவே தெரிய வந்து உள்ளது.

 ‘இறந்து ஒரு வாரம் ஆயிடுச்சு..’ தந்தை மறைவால் கடுமையாக வாடும் ஷெரின்
‘இறந்து ஒரு வாரம் ஆயிடுச்சு..’ தந்தை மறைவால் கடுமையாக வாடும் ஷெரின்

தந்தை மறைவு

இந்நிலையில் நடிகை ஷெரினின் தந்தை கடந்த ஒரு வாரம் முன்பாக உயிர் இழந்து உள்ளார். ஆனால் அவருக்கு அது தாமதமாகவே தெரிய வந்து உள்ளது.

இதனிடையே தந்தை மறைவு குறித்து ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.

இதயத்தை உடைக்கிறது

அதில், “நான் உங்களை நேசித்தேன், என் வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பிற்காக ஏங்கினேன். நீங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்துவிட்டீர்கள், இன்று தான் நான் அறிந்தேன், அது என் இதயத்தை இன்னும் உடைக்கிறது.

இந்த படம் தான் உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்ததெல்லாம். இந்த படம் தான் என்னிடம் எப்போதும் இருக்கும். நான் உங்களை இழக்கிறேன். rest in peace. ” எனக் குறிப்பிட்டு உள்ளார். ஷெரின் தந்தை மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அழகிய அசுரா என்பது 90 ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட ஒரு பாடல். இந்த பாடலில் நடிகை ஷெரின் மீதான அபிமானம் அப்படி.

துள்ளுவதோ இளமை

நடிகை ஷெரின் தமிழ் திரையுலகில் அறிமுகமானதில் இருந்தே பலராலும் விரும்பப்பட்டு நேசிக்கப்படுகிறார். செல்வராகவன் இயக்கிய, துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததற்காகவும் அவர் நன்கு அறியப்பட்டவர். விசில் திரைப்படம் ஷெரினுக்கு அதிக புகழைப் பெற்றுத் தந்தது, ஏனெனில் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் எதிர்மறையானது.

பிக் பாஸ் வாய்ப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இல் ஷெரின் கலந்து கொண்டார். கவின், சாண்டி மாஸ்டர், தர்ஷன், லாஸ்லியா உள்ளிட்ட போட்டியாளர்களுடன் கலக்கலாக இருந்தார்.

குக் வித் கோமாளி

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவரின் மார்கெட் அதிகமான காரணத்தினால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவரின் குணம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக புகழுடன் அவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. அதனாலேயே அவரின் இயல்பான குணம் அனைவருக்கும் பிடித்து போனது.

முன்னதாக ஒரு பேட்டியில், ” நான் என் வாழ்க்கையை ப்ளான் பண்ணாமல் ஓட்டுகிறேன். அதனால் தான் சிறப்பாக போகிறது. வருங்காலத்தில் ஒரே ஒரு ஆசை. ஒரு பண்ணை, அதில் நிறைய விலங்குள் இருக்க வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும்.

தனி பெண்ணாக என் அம்மா என்னை கஷ்டப்பட்டு வளர்த்தார். சினிமாவுக்கு வந்து நான் அவர்களுக்கு உதவிவேன். எங்களை விட்டு விட்டு போனவர் என் அப்பா. ஆனால், இந்த சமூகம் என் அம்மாவை வில்லியாக பார்த்தது. சமுதாயம் மீது எனக்கு கோபம் இருக்கு. யாரும் எங்களுக்கு உதவவில்லை" என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.