Shalu Shammu : என்னோட ஐபோனை காணோம்.. நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shalu Shammu : என்னோட ஐபோனை காணோம்.. நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார்!

Shalu Shammu : என்னோட ஐபோனை காணோம்.. நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார்!

Divya Sekar HT Tamil Published Apr 15, 2023 09:33 AM IST
Divya Sekar HT Tamil
Published Apr 15, 2023 09:33 AM IST

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு தனது ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போனை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடிகை ஷாலு ஷம்மு
நடிகை ஷாலு ஷம்மு

இவர் கடந்த 9 ஆம் தேதி அன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.பின்னர் சூளைமேட்டில் உள்ள தனது தோழி வீட்டில் இரவு தங்கி உள்ளார்.

பிறகு ஏப்ரல் 10-ஆம் தேதி தம்முடைய விலை உயர்ந்த ஐபோன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.பிறகு தான் சென்ற இடங்கள், செல்போன் வாங்கிய ஷோரூம் உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்திருக்கிறார். நட்சத்திர ஓட்டலுக்கு சென்று கேமரா பதிவு காட்சிகளை ஆராய்ந்து பார்த்தார். அதில் செல்போனை யாரும் எடுக்கும் காட்சி பதிவாகவில்லை.

சூளைமேட்டில் தான் தங்கிய தோழி வீட்டிலும் தேடிப்பார்த்தார். அங்கும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. செல்போன் கிடைக்காததை அடுத்து கடந்த 11ஆம் தேதி தன்னுடைய செல்போன் காணாமல் போனதாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ஷாலு ஷம்மு.

நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சி மற்றும் சூளைமேட்டில் தன்னுடன் தங்கி இருந்தவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர் பட்டியலை போலீசில் கொடுத்துள்ளார்.இந்த புகாரையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.