Actress Shakila: தங்கை பார்த்த வேலை…மேலாடையை உருவிய காவலர்.. அசிங்கப்பட்டு நொந்த ஷகிலா! - முதல் படமே இப்படியா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Shakila: தங்கை பார்த்த வேலை…மேலாடையை உருவிய காவலர்.. அசிங்கப்பட்டு நொந்த ஷகிலா! - முதல் படமே இப்படியா?

Actress Shakila: தங்கை பார்த்த வேலை…மேலாடையை உருவிய காவலர்.. அசிங்கப்பட்டு நொந்த ஷகிலா! - முதல் படமே இப்படியா?

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 29, 2024 11:49 PM IST

Actress Shakila latest interview: அந்த ஸ்விம்மிங் தொட்டி கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து அடி வரை ஆழம் இருக்கும் என்று சொன்னார்கள்.

நடிகை ஷகிலா!
நடிகை ஷகிலா!

ஆனால், எனக்கு ஸ்விம்மிங் தெரியாது. அதில் என்னுடைய தங்கை வேறு நடித்தாள். என்னுடைய தங்கைக்கும் ஸ்விம்மிங் தெரியாது. நான் டூ பீஸ் ட்ரெஸ்ஸில் இருந்தேன். என்னுடைய தங்கை ஓன் பீஸ் ட்ரெஸ்ஸில் இருந்தாள். அந்த ஸ்விம்மிங் தொட்டி கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து அடி வரை ஆழம் இருக்கும் என்று சொன்னார்கள்.

முதலில் நான் குதித்தேன். பின்னால் என் தங்கையும் குதித்து விட்டாள். இதில் சிக்கல் என்னவென்றால், அவள் என் மீது விழுந்து விட்டாள். இதனையடுத்து அவள் முதலில் மேலே வர, எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தொட்டிக்குள் காலையும், கையையும் ஆட்டிக் கொண்டிருந்தேன். 

இதைப்பார்த்த பாதுகாப்பாளர் ஒருவர் உள்ளே குதித்து என்னை வெளியே தூக்க முயன்றார். ஆனால் அவர் என்னை வெளியே இழுக்கும்போது, என்னுடைய பிராவை பிடித்து இழுத்தார். 

அப்போது அது அவர் கையோடு வந்துவிட்டது. இதனால் நான் வெளியே வரும்பொழுது மேலாடை இல்லாமல் வந்தேன்.

அன்று வேறு ஏதோ ஒரு பண்டிகை தினம். அந்த ஹோட்டலில் நிறைய மார்வாடிகள் இருந்தார்கள். ஆகையால் அங்கிருந்த மொத்த பேரும் என்னை அப்படியே பார்த்து விட்டார்கள்.  அது எனக்கு மிகவும் அசிங்கமாக சென்றுவிட்டது. புராண கதைகளில் மானத்தை காப்பாத்த கிருஷ்ணர் துணி கொடுத்தார் என்றெல்லாம் சொல்வார்கள்.

அந்த இடத்தில் அந்த நேரத்தில், எனக்கு யாரோ கிருஷ்ணர் போல் இருந்தவர் துண்டை தூக்கி எறிந்தார். அதை தூக்கிக் கொண்டு நான் அப்படியே ரூமுக்குள் சென்று விட்டேன்.அன்றைய தினம் முழுக்க நான் உரிமை விட்டு வெளியே வரவே இல்லை" என்று பேசினார்.

முன்னதாக, நடிகை ஷகிலா பெட்டர் டுடே சேனலிக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து பேசினார்.

அவர் பேசும் போது, “எனக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு இஷ்டம். இன்றும் எங்காவது கடைக்குச் சென்றால், அங்கு யாராவது குழந்தையை வைத்திருந்தால், அதை அவரிடம் இருந்து வாங்கிக் கொண்டு ஐந்து நிமிடம் வைத்திருப்பேன். அந்தக் குழந்தை அழுதவுடன் அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடுவேன்.

எனக்கும் கல்யாணம் செய்து நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது; ஆனால் நம் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதானே நடக்கும். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும். எனக்கென்று ஒரு குடும்பம் வேண்டும் என்பதற்காகவெல்லாம் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள முடியாது.

நான் கிட்டத்தட்ட 20, 30 காதல்களை செய்திருப்பேன். அந்த எல்லா காதல் வாழ்க்கையையுமே கல்யாணத்தை நோக்கி இழுத்துச் செல்ல முயற்சிகள் செய்தேன். ஆனால் அவை எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இதை வெளிப்படையாக சொல்கிறேன். நான் இப்படித்தான். இதை நான் சொல்வதின் மூலமாக உங்களை எனக்கு பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை.

காரணம் நான் ஒரு பேட்டி கொடுத்தால், அதில் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பேன். காதல் ஒரு முறை தான் வரும் என்றெல்லாம் விதிமுறை கிடையாது. அது சாகும் வரை வந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த காதல் யார் மீது வருகிறது என்பதை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதனால் நீங்கள் ஒரு காதல் வாழ்க்கையில் தோற்று விட்டீர்கள் என்றால் பராவாயில்லை. காரணம் காதலானது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதை என்னை அம்மாவாக பார்க்கும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொள்கிறேன். வாழ்க்கையில் ஒரு காதல் வாழ்க்கை தோற்று விட்டது என்றால் அப்படியே வாழ்க்கை முடிந்து விட்டது என்று அர்த்தம் கிடையாது.

காதலுக்காக நான் இதுவரை எந்தவித தற்கொலை முயற்சியும் செய்தது கிடையாது. கையை அறுத்துக் கொண்டதும் கிடையாது. ஆனால் என்னுடைய காதலர்கள் கையை கட் செய்து கொண்டிருக்கிறார்கள். கையை மட்டும் இல்லை, எதை எதை எல்லாமோ கட் செய்து இருக்கிறார்கள். உடனே நீங்கள் வேறு எதையோ நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவள். எனக்காக அவர்கள் சுன்னத் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதைதான் அப்படி சொன்னேன்.

என்னை காதலித்த எல்லோரையும் நான் ஆழமாக நேசித்தேன் அவர்களும் என்னை ஆழமாக நேசித்தார்கள். அது இணையாமல் சென்று விட்டால், அது இணையாமல் சென்று விட்டது அவ்வளவுதான்.அதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு எல்லாம் இருக்க முடியாது.” என்று பேசினார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.