Actress Shakeela: 'முடிஞ்சா தொட்டுப்பார்’ - அடி வாங்கிய சர்ச்சையில் சவால்விட்ட நடிகை ஷகீலா
நடிகை ஷகீலா, தான் அடி வாங்கியது குறித்த சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஷகீலாவின் வளர்ப்பு மகளான ஷீத்தல், தனது வளர்ப்பு அம்மா ஷகீலா குடித்துவிட்டு போதையில் வந்து தன்னை அடிக்கிறார் என்று புகார் ஒன்றைக் கூறினார். அதேபோல், ஷகீலா அடிவாங்கியதாகவும் சில செய்திகள் வந்தன. இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஷகீலா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் ‘இனிமே நாங்க தான்’ என்னும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் விழா மேடையில் பேசுவதற்கு முன், 'இனிமே நாங்க தான்’படத்தின் இயக்குநர் பிரபாவை அருகில் அழைத்து வந்து அருகில் வைத்துக்கொண்டு பேசினார்.
அப்போது பேசிய நடிகை ஷகீலா, ’முதலில் விழாமேடையில் இருக்கிற அனைவருக்கும் என் வணக்கம். நான் இந்தப் படத்தில் கொஞ்ச நேரம் வருகிறமாதிரியான கதாபாத்திரத்தில் தான் நடிச்சேன். ஜெய் ஆகாஷ் கிரியேட்டரை முன்னேற்றணும் நினைக்கிறார்.அவருக்கு எனது நன்றி. 'அன்னம்பெட்டின ராம் அண்ணாவுக்கு' தாங்ஸ். புத்தூரில் அவ்வளவு ருசியான பிரியாணி கிடைக்கும்னு தெரியாதுப்பா. எனக்கு செம சாப்பாடு கொடுத்தவர். இயக்குநரும் கேமரா மேனும் என்னை வைத்து நிறைய ஷாட்கள் எடுத்து கஷ்டப்படுத்தினாங்க. எல்லா ஹீரோயின்ஸும் வட மாநிலங்களில் இருந்து வர்றாங்க. ஃபுல் மேக்கப் போட்டுக்கிறாங்க. நான் கூட மேக்கப் போட்டுட்டு இருக்கேன். எத்தனை வருஷமா திரைத்துறையில் இருக்கேன். எனக்கு அந்த உரிமை இருக்கு. இந்த நான்கு பெண்ணின ரொம்ப ஒரிஜனலாக இருக்கு. எனக்குப் பிடிச்சிருந்தது. படம் என்றால் இப்படிதான் இருக்கணும்னு நான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு அவார்டு ஃபிலிம் மாதிரி. எல்லாத்துக்கும் மேக்கப் போட்டுக்கிட்டு ஜாஸ்தியா செய்யாம, இன்ட்ரெஸ்டிங் இருக்கிற மாதிரி படம் வந்திருக்கு. சின்ன டைரக்டர் சின்ன டைரக்டர்னு சொல்லாதீங்க. எல்லோரும் சின்ன டைரக்டரா இருந்து தான் பெரிய டைரக்டர் ஆகியிருக்காங்க. சின்ன நடிகரா இருந்து தான் பெரிய நடிகரா ஆனாங்க. அதெல்லாம் இயக்குநர் நீங்க ஃபீல் பண்ணக்கூடாது. இந்தப் படம் நூறு விழுக்காடு வெற்றியடையும். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. கொஞ்ச நாட்களாக என்னை பலவிதமாக எழுதுறாங்க. ஷகீலாவை அடித்து நொறுக்கிவிட்டனர் என சொல்றீங்க. எங்கப்பா அடிவாங்கி இருக்கிறேன். நம்மை எல்லாம் அடிக்க முடியுமாப்பா?. நீங்களும் ஏதோ எழுதுறீங்க. எழுதுங்க.. எழுதுங்க. அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நான் இந்தக்குழுவுடன் திரும்பவும் பணிபுரிய ஆசைப்படுகிறேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
