Actress shakeela interview: ‘எனக்காக அத கட் பண்ணான்… 20,30 காதல் பண்ணிருப்பேன்.. - ஷகிலாவின் காதல் வாழ்க்கை!
நான் ஒரு பேட்டி கொடுத்தால், அதில் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பேன். காதல் ஒரு முறை தான் வரும் என்றெல்லாம் விதிமுறை கிடையாது. அது சாகும் வரை வந்து கொண்டே இருக்கும்.

ஷகிலா பேட்டி!
நடிகை ஷகிலா பெட்டர் டுடே சேனலிக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து பேசினார்.
அவர் பேசும் போது, “எனக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு இஷ்டம். இன்றும் எங்காவது கடைக்குச் சென்றால், அங்கு யாராவது குழந்தையை வைத்திருந்தால், அதை அவரிடம் இருந்து வாங்கிக் கொண்டு ஐந்து நிமிடம் வைத்திருப்பேன். அந்தக் குழந்தை அழுதவுடன் அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடுவேன்.
எனக்கும் கல்யாணம் செய்து நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது; ஆனால் நம் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதானே நடக்கும். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும். எனக்கென்று ஒரு குடும்பம் வேண்டும் என்பதற்காகவெல்லாம் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள முடியாது.