‘கேரள சினிமாவை கழுவி ஊற்றும் ஷகீலா.. ஆணாதிக்கத்துக்கு பேர் போனது.. ’ கோவத்தை கொட்டித் தீர்த்த ஷகீலா..
கேரள சினிமா ஆணாதிக்கத்தின் உச்சத்தை கொண்டுள்ளது என நடிகை ஷகீலா தனது ஆதங்கத்தையும் கோவத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

திரையுலகில் புதுமையான படைப்புகளுக்கும் மண் சார்ந்த படைப்புகளுக்கும் பெயர் போனது என்றால் கேரளா தான். மக்கள் மனம் பேசும் எதார்த்த படைப்புகள் அங்கே கொட்டிக் கிடக்கும் எனவும் காட்சி அமைப்புகளும் இசையும், வசனமும் மக்கள் மனநிலையை பிரதிபலிக்கும் எனவும் கூறி சிலாகித்து வரும் சமயத்தில் தான் வெளியானது ஹேமா கமிட்டி அறிக்கை.
ஹேமா கமிட்டி அறிக்கை
அந்த அறிக்கை வெளியான சமயத்தில், கேரள சினிமாவின் பெரும் ஜாம்பவான்கள் எல்லாம் செய்த அத்தனை சில்மிஷங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவை சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கேரள திரைத்துறையில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை மட்டுமே பேசியது. ஆனால், நாகரீகமும் கலாச்சாரமும் மாறிவரும் இந்த காலத்தில் இந்த அறிக்கைக்கு வாக்குமூலம் எடுத்திருந்தால் நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும்.
கூண்டோடு ராஜினாமா
என்னவாக இருப்பினும், இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கையால் ஆடிப்போன கேரள அரசின் திரைப்பட சங்கமான அம்மா அசோசியேஷன் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.