நடிகை சீதா வீட்டில் நேர்ந்த சோகம்.. இன்ஸ்டாகிராமில் சோகமாக போட்ட பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்.. என்ன நடந்தது?
நடிகை சீதாவின் தாயார் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிந்தார். இதுகுறித்து நடிகை சீதா தனது இன்ஸ்டாகிராமில் சோகமாக பதிவிட்டுள்ளார்.

நடிகை சீதா நடிக்க வந்த காலத்தில் தொடக்கத்திலேயே இளைஞர்களை தன்வசம் கவர்ந்துவிட்டார். இவர் நடிகை மட்டுமல்ல தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம் தெலுங்கு சினிமாக்களில் அதிகளவில் பணியாற்றினார். 1985ம் ஆண்டில் நடிக்கத் துவங்கினார். அப்போது முதல் அவர் தமிழ் சினிமாவின் கதாநாயகியாகவும், சிறந்த நடிகையாகவும் வலம் வந்தார். 1991ம் ஆண்டு வரை நடித்தார். பின்னர் நடிப்புக்கு இடைவெளி கொடுத்திருந்த சீதா 2002ம் ஆண்டு மாறன் படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். ஆண் பாவம் என்ற படத்தில் 1985ம் ஆண்டு அறிமுகமானார்.
அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்தார்
ஆண் பாவம் படத்தில் கிராமத்து பெண்ணாக ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில், பாவாடை தாவணியில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சீதா. இந்த படத்திற்கு பின் ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, சங்கர் குரு, தங்கச்சி, துளசி, குரு சிஷ்யன், பெண்மணி அவள் கண்மணி, அவள் மெல்ல சிரித்தாள் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்தார்.
இவர் நடிக்கத் துவங்கிய ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக மட்டுமே நடித்தாலும் பின்னாளில் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடிக்கத் துவங்கினார். திரைப்படங்களில் மட்டுமின்றி இவர் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் பார்த்திபனை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பின்னர் இவர் சின்னத்திரை நடிகர் சதீஷை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரிடம் இருந்தும் விவகாரத்து பெற்றார். சீதா – பார்த்தீபன் தம்பதிக்கு அபிநயா, கீர்த்தனா, ராக்கி என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.