HBD Seetha: அழகிய முகம் கொண்ட நாயகி.. குழந்தை போன்ற நடிப்பு.. 80களில் இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகை சீதா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Seetha: அழகிய முகம் கொண்ட நாயகி.. குழந்தை போன்ற நடிப்பு.. 80களில் இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகை சீதா

HBD Seetha: அழகிய முகம் கொண்ட நாயகி.. குழந்தை போன்ற நடிப்பு.. 80களில் இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகை சீதா

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 13, 2024 06:30 AM IST

HBD Seetha: நடிகை சீதா 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ள சீதாவின் மிகப்பெரிய உறுதுணையே அவரது தாய்தான். இன்று பிறந்த நாள் காணும் சீதா தனது வாழ்வில் இன்புற்று இருக்க ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது.

அழகிய முகம் கொண்ட நாயகி.. குழந்தை போன்ற நடிப்பு.. 80களில் இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகை சீதா
அழகிய முகம் கொண்ட நாயகி.. குழந்தை போன்ற நடிப்பு.. 80களில் இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகை சீதா

இவர் தமிழ், மலையாளம் தெலுங்கு சினிமாக்களில் அதிகளவில் பணியாற்றினார். 1985ம் ஆண்டில் நடிக்கத் துவங்கினார். அப்போது முதல் அவர் தமிழ் சினிமாவின் கதாநாயகியாகவும், சிறந்த நடிகையாகவும் வலம் வந்தார். 1991ம் ஆண்டு வரை நடித்தார். பின்னர் நடிப்புக்கு இடைவெளி கொடுத்திருந்த சீதா 2002ம் ஆண்டு மாறன் படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். ஆண் பாவம் என்ற படத்தில் 1985ம் ஆண்டு அறிமுகமானார்.

இவர் நடிக்கத் துவங்கிய ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக மட்டுமே நடித்தாலும் பின்னாளில் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடிக்கத் துவங்கினார். திரைப்படங்களில் மட்டுமின்றி இவர் சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.

இவர் நடிகர் பார்த்திபனை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பின்னர் இவர் சின்னத்திரை நடிகர் சதீஷை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரிடம் இருந்தும் விவகாரத்து பெற்றார். சீதா – பார்த்தீபன் தம்பதிக்கு அபிநயா, கீர்த்தனா, ராக்கி என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவரது தந்தை மோகன் பாபுவும் தமிழ் நடிகர் ஆவார். இவரது தாய் சந்த்ராவதி. இவருக்கு பாண்டு, துஷ்யந்த் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். சென்னையில் பிறந்தவர். இவருக்கு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. இவர் மிகவும் எதார்த்தமானவர்.

ஒரு திருமணத்தில் சீதாவை சந்தித்த பாண்டியராஜ், அவரது தந்தையிடம் விளையாட்டாக அவர் படத்தில் நடிப்பாரா என்று கேட்டுள்ளார். அவரது தந்தையும் ஒத்துக்கொண்டதையடுத்து சீதா ஆண்பாவம் படத்தில் அறிமுகமானார்.

அந்தப்படத்தில் நடிப்பதற்கு நிறைய டேக் எடுத்துக்கொண்டதால், சினிமாவே வேண்டாம் என்று நினைத்தாராம். ஆனால் அவரது தந்தைதான் அவரை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தார். சம்பளமே வாங்காமல் இந்தப்படத்தில் நடித்துள்ளார். படம் வெற்றி பெற்றதையடுத்து, இந்தப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் இவருக்கு கார் பரிசளித்துள்ளனர்.

அதற்கு பின்னர் பரபரப்பான நடிகையாக மாறினார். தொடர்ந்து இவருக்கு புதிய பாதை வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படம் பயங்கர ஹிட்டானது. இந்தப் படத்தில்தான் பார்த்திபன் - சீதாவின் காதலும் மலர்ந்தது. வீட்டில் மறுத்து, வீட்டைவிட்டு வெளியேறி கிட்டத்தட்ட சினிமா பாணியிலான முறையில் திருமணம் ஆனது. விவகாரத்துக்கு பின்னரும் குழந்தைகளுக்கான தேவைகளை இருவரும் சரியாக நிறைவேற்றி வருகிறார்கள்.

தற்போது எம்ராய்ட்ரி, ஓவியம், சமையல், மாடித்தோட்டம் என பிஸியாக உள்ளார். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ள சீதாவின் மிகப்பெரிய உறுதுணையே அவரது தாய்தான். இன்று பிறந்த நாள் காணும் சீதா தனது வாழ்வில் இன்புற்று இருக்க ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.