Sathyapriya:சத்யபிரியாவுக்கு இப்படி ஒரு மருமகளா? எல்லாம் ஒரு சமோசா செஞ்ச வேலை!
பிரபல நடிகை சத்யபிரியா தன்னுடைய வெளிநாட்டு மருமகளை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
‘மஞ்சள் முகமே வருக’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சத்யபிரியா. அதன் பின்னர் ‘பேரும் புகழும்’ ‘கண்ணன் ஒரு கை குழந்தை’ ‘அஞ்சலி’ ‘ரிக்ஷா மாமா’ ‘ரோஜா’ ‘சீவலப்பேரி பாண்டி’ ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இப்படி கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட படங் களில் நடித்துள்ள இவர் ‘புன்னகை’ ‘கோலங்கள்’ ‘ரோஜா கூட்டம்’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிப்பரபாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் இவர் பிஹைண்ட் வுட்ஸ்சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தன்னுடைய மருமகள் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பதை சொன்னார். அத்துடன் அந்த நேர்காணலில் அவருடைய மகனும், மருமகளும் இணைந்து தங்களுடைய காதல் கதையை பகிர்ந்தனர்.
இதோ சத்யபிரியா மகன் பகிர்ந்த சுவாரசிய கதை
நான் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் வேலை செய்து கொண்டிருந்தேன்; எனது மனைவி நியூஜெர்சியை சேர்ந்தவர். நான் வாஷிங்டன் டிசியில் இருந்து நியூஜெர்சிக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன்; எனக்கு மிகவும் பயங்கரமான பசி; அப்போது என்னுடைய மனைவி இந்தியன் சமோசாவை சாப்பிடுவதற்கு ரெடியாக இருந்தார்; அதை பார்த்த நான் எனக்கு அதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி விட்டது.
அதனால் அவரிடம் சென்று தயவு செய்து தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்;எனக்கு இந்த இந்தியன் சமோசாவை தந்து விடுங்கள்; நான் உங்களுக்கு ரயிலுள்ள கேண்டீனில் வேறு ஏதாவது உணவை வாங்கித் தருகிறேன் என்று சொன்னேன்.
அப்படித்தான் எங்கள் சந்திப்பு நடந்தது. அந்த ரயில் பயணம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீண்டது. நாங்கள் இருவரும் நிறைய விஷயங்களை பற்றி பேசினோம். ஒருவருக்கொருவர் பிடித்துப் போனது. பின்னர் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து பின்பு காதலர்களாக மாறனும். அதை அம்மாவிடம் சொன்ன பொழுது அம்மா காதலுக்கு சம்மதம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.” என்று பேசினார்.