Sanam Shetty Reveals: ’செருப்பாலயே அடிப்பேன் நாயே!’ போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீறிய நடிகை சனம் ஷெட்டி!-actress sanam shetty addresses atrocities against women at chennai police commissioners office - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sanam Shetty Reveals: ’செருப்பாலயே அடிப்பேன் நாயே!’ போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீறிய நடிகை சனம் ஷெட்டி!

Sanam Shetty Reveals: ’செருப்பாலயே அடிப்பேன் நாயே!’ போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீறிய நடிகை சனம் ஷெட்டி!

Kathiravan V HT Tamil
Aug 20, 2024 04:21 PM IST

அட்ஜெஸ்ட்மண்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற கொடுரமான சூழ்நிலைக்கு எதிராக நான் குரல் கொடுத்து உள்ளேன். பெண்கள் மட்டும் அல்ல; ஆண்களும் இந்த சிக்கல்களை சந்திகின்றனர். அட்ஜெட்ஸ்மண்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என்றால் காரி துப்பிவிட்டு வெளியில் செல்லுங்கள் என சனம் ஷெட்டி கூறி உள்ளார்.

Sanam Shetty Reveals: ’செருப்பாலயே அடிப்பேன் நாயே!’ போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீறிய நடிகை சனம்  ஷெட்டி!
Sanam Shetty Reveals: ’செருப்பாலயே அடிப்பேன் நாயே!’ போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீறிய நடிகை சனம் ஷெட்டி!

தொடரும் பாலியல் வன்கொடுமைகள் 

சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை சனம் ஷெட்டி கூறுகையில்,  பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து சொல்வதற்கே கஷ்டமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பதிவாகி உள்ளது. கொல்கத்தாவில் நடந்த பாலியல் வன்கொடுமைக்காக இங்கு ஏன் போராட வேண்டும் என்று கூறுபவர்களுக்கு, நேற்று கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. இதில் அப்பள்ளியின் முதல்வர் சம்பந்தப்பட்டு உள்ளார். 

பெங்களூருவில் 21 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானேவில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. 

மாற்றம் ஆண்களிடம் இருந்து வர வேண்டும் 

பெண்களை வெளியில் போகாதே, இது போன்ற ஆடைகளை போடாதே!, யாரையும் நம்பாதே என்று சொல்லி வளர்த்துக் கொண்டு இருக்கிறோம். இதை எவ்வளவு நாளைக்கு சொல்வது.  

ஆனால் அடிப்படை மாற்றம் ஆண்களின் மனதில் கொண்டு வர வேண்டும். அடுத்த தலைமுறையிலாவது மாற்றம் வர வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளோம். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பலரும் தப்பித்து வருகின்றனர். நிர்பயா வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 

போராட்டத்திற்காக அனுமதி கேட்டு உள்ளோம்

இதற்கான அனுமதி கேட்டு காவல் ஆணையரை சந்திக்க வந்து உள்ளோம். காவல்துறை அதிகாரிகள் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் நிறைய பெண்கள் சந்திக்கும் பிரச்னையாக இது உள்ளது. காவல்துறையின் ஆதரவு இல்லாமல் இதனை செய்ய முடியாது. 

பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு ஆண், பெண் பேதமின்றி எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு குடும்பத்திற்கு உள்ளேயும் கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. தயக்கம் இல்லாமல் அனைவரும் முன் வந்து இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும். ஒரு மாற்றம் நிச்சயமாக தேவைப்படுகின்றது. வரும் சனிக்கிழமை அன்று நாங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என கூறினார். 

”செருப்பால் அடிப்பேன் நாயே”

மலையாள திரை உலகில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் சிக்கல் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சனம் ஷெட்டி, ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரம் எனக்கு தெரியாது. ஆனால் இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். இது போன்று ஒரு அறிக்கையை அவர்கள் கொண்டு வந்ததற்கு ஹேமா அவர்களுக்கும், கேரள அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் தமிழ் திரை உலகிலும் நடைபெறுகின்றது. இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. என்னுடைய சொந்த அனுபவத்திலும் நான் சொல்லி உள்ளேன். ஆனால் இது பற்றி அன்றே ஏன் சொல்லவில்லை என்று சொல்வார்கள். செருப்பால் அடிப்பேன் நாயே என்று நான் கூறி நான் போனை கட் செய்து உள்ளேன். 

காரி துப்பிவிட்டு வெளியில் செல்லுங்கள்

அட்ஜெஸ்ட்மண்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற கொடுரமான சூழ்நிலைக்கு எதிராக நான் குரல் கொடுத்து உள்ளேன்.  ஆனால் சினிமா துறையில் அனைவருமே இப்படியா என்றால், அப்படி கிடையாது. பெண்கள் மட்டும் அல்ல; ஆண்களும் இந்த சிக்கல்களை சந்திகின்றனர். அட்ஜெட்ஸ்மண்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என்றால் காரி துப்பிவிட்டு வெளியில் செல்லுங்கள். இதுமாதிரி ஒரு படமே வேண்டாம். உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.