Samantha: இதனால் தான் தமிழ் படங்களில் நடிப்பதில்லை.. ஓபனாக பேசி தமிழ் ரசிகர்களை ஷாக் ஆக்கிய சமந்தா!
Samantha: நடிகை சமந்தா தான் ஏன் அதிகம் தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படையாகவே பேசி அதிர்ச்சி அளித்துள்ளார்.

Samantha: நடிகை சமந்தாவிற்கு தமிழ் ரசிகர்களிடம் பெரிதாக அறிமுகமே தேவையில்லை. அவர் அவ்வளவு புகழ் பெற்றவர். அப்படி இருக்கும் சமந்தா, ஏன் அதிக தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்திருக்கும்.
2022க்கு பிறகு தமிழ் படமே இல்லை
இந்த நிலையில் தான், நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் நியூஸ் 18 சேனலுக்கு அளித்த பேட்டியில் இதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் சொன்ன காரணம் தமிழ் ரசிகர்களையும் இயக்குநர்களையும் மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அந்தப் பேட்டியில், சமந்தாவின் கடைசி தமிழ் படம் 2022 இல் வெளியான விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல். அதன்பின் 3 வருடங்கள் ஆகியும் ஏன் அதிக தமிழ் படங்களில் கையெழுத்திடவில்லை என்று கேட்டனர்.
தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்
அப்போது பேசிய சமந்தா, "ஆம். அது உண்மை தான். பல படங்களில் நடிப்பது எளிது. ஆனால் நான் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறேன். அங்கு ஒவ்வொரு படமும் கடைசிப் படம் போல நான் உணர வேண்டும். நான் தேர்வு செய்யும் படம் அந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி நான் ஒப்புக் கொள்ளும் படங்களில் அந்த மாதிரியான நூறு சதவீதத்தை நான் உணரவில்லை என்றால் அதைச் செய்ய என்னால் முடியாது எனக் கூறினார்.
இவர்கள் உற்சாகம் தந்தார்கள்
தற்போது சமந்தா ராஜ் & டி.கே. உடன் மீண்டும் ரக்த் பிரம்மாண்ட் எனும் வலைதொடரில் கையொப்பமானதாக தெரிகிறது. இதுகுறித்து பேசிய சமந்தா “தி பேமிலி மேன் (சீசன் 2) மூலம், நான் இதற்கு முன்பு செய்யாத ஒன்றைச் செய்ய முடிந்தது. மீண்டும் சிட்டாடல்: ஹனி பன்னி போன்றவை ஒரு நடிகையாக எனக்கு மிகுந்த சவாலாக அமைந்தது. அது எனக்கு உற்சாகத்தை தந்தது.
வேலைக்கு செல்வதே வீணாக கூடாது
இப்போது அவர்களுடன் ஒப்பந்தமாகியுள்ள ரக்த பிரம்மாண்டமும் கூட அப்படித் தான். அவர்கள் தான் என்னை மேலும் மேலும் பல சவால்களை சந்திக்க வைத்து என்னை உற்சாகமாக வைத்தனர். நான் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங்கிற்கு செல்லும்போது, ஒரு நடிகையாக ஒரு வேடத்திற்கு அவ்வளவு மெனக்கெடுவது எனக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அந்த உணர்வு எனக்குக் கிடைக்கவில்லை என்றால், நான் வேலைக்குச் செல்வதே விருப்பமில்லாத ஒன்றாக மாறிவிடும்.” என்றார்.
நான் யாரையும் ஏமாற்ற கூடாது
மேலும், 'தான் ஒரு கதையை தேர்வு செய்வதன் மூலம் அது தன்னையோ அல்லது வேறு யாரையோ நாம் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதனால், நான் என் கதையை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
சமந்தா உடல்நிலை
2021 இல் நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற சமந்தா 2022ம் ஆண்டு மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சில நாட்களுக்கு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
பின், 2023 ஆம் ஆண்டில், அவர் தெலுங்குப் படங்களான சாகுந்தலம் மற்றும் குஷி ஆகியவற்றில் நடித்தார், இரண்டும் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டன. இதன்பின் சிட்டாடல்: ஹனி பன்னி வெப் சீரிஸ் கடந்த 2024 இல் வெளியானது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரக்த பிரம்மாண்ட் எனும் புதிய கதையில் அவர் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்