சமந்தா செய்த வேலையால் நாக சைதன்யாவை சீண்டும் ரசிகர்கள்.. விட்டு பிரிஞ்சாலும் விடாம துரத்தும் பேச்சு..
நடிகை சமந்தா, பெண்கள் நோய்வாய் பட்டிருக்கும் போது ஆண்கள் அவர்களை விட்டு பிரிந்து விடுவார்கள் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டு வந்த ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டிற்கு லைக் செய்துள்ளார். இதையடுத்து சமந்தாவின் ரசிகர்கள் நாக சைதன்யாவை இந்த போஸ்ட்டோடு தொடர்பு படுத்தி பேசி வருகின்றனர்.

ஆட்டோ இம்யூன் கோளாறுடன் போராடிய நடிகை சமந்தா, நோய்வாய்ப்பட்ட பெண்களை விட்டுச் செல்லும் ஆண்கள் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவை லைக் செய்துள்ளார். இந்த பதிவில் அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் அதனை ஷேர் செய்யவும் இல்லை. இருந்தாலும் பெரும்பாலான இணையவாசிகள் சமந்தா, நாக சைதன்யாவைத் தான் மனதில் வைத்து இந்த போஸ்ட்டை லைக் செய்துள்ளார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். அது என்ன போஸ்ட் என்பதை இங்கு பார்க்கலாம்.
சமந்தாவின் இன்ஸ்டா பதிவு லைக்
சக்ஸஸ்வெர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம், டையரி ஆஃப் ஏ சிஇஓ என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை பகிர்ந்துள்ளது. 'நோய்வாய்ப்பட்ட துணையை விட்டுச் செல்லும் ஆண்கள்: உறவை கைவிடுவதற்கான உண்மை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த பதிவு, 'ஆண்கள் தங்கள் துணை நோய்வாய்ப்பட்டால் 624% அதிகமாக விட்டுச் செல்வார்கள்' என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை கூறுகிறது. இதற்கான காரணங்களை இரண்டு நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.