'எனக்கு கோயில் எல்லாம் கட்டாதீங்க.. நான் அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறேன்..'- நடிகை சமந்தா
நடிகை சமந்தா தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான சுபம் படத்தின் வெளியீட்டிற்காக மிக ஆவலாக காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

'எனக்கு கோயில் எல்லாம் கட்டாதீங்க.. நான் அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறேன்..'- நடிகை சமந்தா
நடிகை சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் சுபம். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (மே 6) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ஒரு தயாரிப்பாளராக தனது முதல் வெள்ளிக்கிழமைக்காக ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார். அதே சமயம் தனக்கு கோயில் கட்டி வழிபடுவது பற்றியும் பேசியுள்ளார்.
தயாரிப்பாளராக முதல் வெள்ளிக்கிழமை
சமந்தா பேசுகையில் "ஒரு நடிகையாக, வெள்ளிக்கிழமை எப்படி இருக்கும் என்பது குறித்து எனக்கு அனுபவம் உண்டு. ஆனால் ஒரு தயாரிப்பாளராக இது எனது முதல் வெள்ளிக்கிழமை இது. நான் மிகவும் பதட்டமாக இருக்கிறேன். தயாரிப்பாளர் எவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பது இப்போது புரிகிறது.
