திருப்பதியில் தரிசனம் செய்த நடிகை சமந்தா.. தொடர்ந்து வந்த கிசுகிசுக்கள்.. என்ன ஆச்சு?
நடிகை சமந்தா திருப்பதி கோயிலில் தரிசனம் செய்ய வந்த நிலையில், அந்த செய்தியை பார்த்த பலரும் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

நடிகை சமந்தா தற்போது 'சுபம்' என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். இந்தப் படம் அடுத்த மாதம் மே 9 ஆம் தேதி ரிலீஸிற்கு தயாராக உள்ள நிலையில், இந்தப் படத்திற்கு ஆசிர்வாதம் பெற, நேற்று ஏப்ரல் 19 ஆம் தேதி திருப்பதி பாலாஜி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். இந்த செய்தி தான் அவர் குறித்த கிசுகிசுக்களுக்கு அடித்தளமிட்டுள்ளது.
திருப்பதியில் சமந்தா
நடிகை சமந்தா நேற்று திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். பளிச்சிடும் இளஞ்சிவப்பு நிற சல்வாரில் சமந்தா அழகாகக் காட்சியளித்தார். இவருடன் இயக்குநர் ராஜ் கோயிலுக்கு வந்திருந்தார். அவர்களுடன் பாதுகாப்புப் பணியாளர்களும் இருந்தனர். மற்றொரு வீடியோவில், ஆர்ச்சகரின் உதவியுடன் இவர்கள் பூஜை செய்தனர். டிசம்பர் 2023 இல் சமந்தா 'ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான சுபம் படத்திற்காக இந்த பூஜை நடைபெற்றது.