அரசல்.. புரசல் எல்லாம் இல்ல... போட்டோவ பாத்து கன்ஃபார்ம் செய்த சமந்தா ஃபேன்ஸ்! அப்போ இது அதுதான?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அரசல்.. புரசல் எல்லாம் இல்ல... போட்டோவ பாத்து கன்ஃபார்ம் செய்த சமந்தா ஃபேன்ஸ்! அப்போ இது அதுதான?

அரசல்.. புரசல் எல்லாம் இல்ல... போட்டோவ பாத்து கன்ஃபார்ம் செய்த சமந்தா ஃபேன்ஸ்! அப்போ இது அதுதான?

Malavica Natarajan HT Tamil
Published May 08, 2025 06:38 AM IST

நடிகை சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதை அடுத்து அவர்கள் டேட்டிங் செய்வதாக ரசிகர்கள் தாங்களாகவே உறுதி செய்துள்ளனர்.

அரசல்.. புரசல் எல்லாம் இல்ல... போட்டோவ பாத்து கன்ஃபார்ம் செய்த சமந்தா ஃபேன்ஸ்! அப்போ இது அதுதான?
அரசல்.. புரசல் எல்லாம் இல்ல... போட்டோவ பாத்து கன்ஃபார்ம் செய்த சமந்தா ஃபேன்ஸ்! அப்போ இது அதுதான?

டேட்டிங்கில் சமந்தா?

சில மாதங்களாக, நடிகை சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இரு தரப்பினரும் தங்களைப் பற்றி உலாவரும் வதந்திகளை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்றாலும், அவர்கள் அடிக்கடி ஒன்றாக பொதுவெளியில் காணப்பட்டனர்.

இந்த நிலையில், சமந்தா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அவர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதை 'உறுதிப்படுத்தலாக'த் தெரிகிறது. மேலும் அவர்களை இந்தப் புகைப்படங்கள் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜ் நிடிமோருவுடன் சமந்தா

தனது முதல் தயாரிப்பான சுபம் விரைவில் வெளியாவதில் உற்சாகமாக உள்ள சமந்தா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பல புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். அவர், “இது ஒரு நீண்ட பயணம், ஆனால் இதோ நாங்கள் இருக்கிறோம். ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் உடன் ஒரு புதிய தொடக்கங்கள் எனக் கூறியதுடன் சுபம் படம் வரு மே 9ஆம் தேதி வெளியாகிறது,” என்று தனது செல்லப்பிராணிகளான ஹாஷ் மற்றும் சாஷாவுடன் இருக்கும் புகைப்படங்கள், படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில தருணங்கள் மற்றும் பலவற்றைப் பகிர்ந்துள்ளார்.

எல்லாம் உண்மை தான்

அதில் சில புகைப்படங்கள் சமந்தா ராஜ் ராஜ் உடன் சிரித்தபடி செல்ஃபி எடுக்கும் விதமாகவும் சாஷா ராஜின் தோளில் சாய்ந்து அவர் சிரிப்பதைப் பார்க்கும் மற்றொரு படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வெளியான உடனேயே ரசிகர்கள் புகைப்படங்களை ரசிக்கத் தொடங்கியதுடன் அவர்கள் சமந்தா மற்றும் ராஜின் காதலை புகைப்படங்களை வைத்து உறுதிப்படுத்தினர். மேலும் அவர்கள் டேட்டிங் வதந்திகளையும் உண்மை என கூறி வருகின்றனர்.

கமெண்டில் கன்ஃபார்ம் செய்த ரசிகர்கள்

சமந்தா பதிவிட்ட புகைப்படங்களில் கவனம் செலுத்திய ரசிகர்களில் ஒருவர், “அப்படியானால் இது உறுதிப்படுத்தப்பட்டது. இது சில படங்களில் தெரிகிறது” என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “நானும் அதையே நினைக்கிறேன்” என்று ஒப்புக்கொண்டார். ஒரு ரசிகர் தன் கழுகுப் பார்வையை செலுத்தி, சமந்தா பதிவிட்ட போட்டோ ஒன்றில் லிஃப்டில் பூங்கொத்துடன் இருக்கும் ராஜை கண்டுபிடித்தார், “லிஃப்ட் படத்தில் ராஜ் இருக்கிறார்!!! ஓ மை காட் ” என துள்ளிக் குதித்தார். சிலர், “7வது படத்தில் ராஜ் நிடிமோரு இருக்கிறார்” என்று சுட்டிக்காட்டினர், மேலும் சிலர் அவர் அவருடன் எவ்வளவு ‘மகிழ்ச்சியாக’ இருக்கிறார் என்று கருத்து தெரிவித்தனர்.

சமந்தா- ராஜ் முந்தய உறவு

சமந்தாவும் ராஜும் இணைந்து தி ஃபேமிலி மேன் மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய வெப் தொடர்களில் பணியாற்றினர். சமந்தா இப்போது ரக்த பிரம்மாண்டம்: தி பிளடி கிங்டம் என்ற படத்தில் ராஜுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர்கள் சென்னை சூப்பர் சாம்ப்ஸ் என்ற பிக்பால் அணிக்காகவும் கூட்டு சேர்ந்துள்ளனர். முன்னதாக ராஜ் ஷ்யாமலி தேவ் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். சமந்தா நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்த நிலையில், அவர்கள் 2021 ஆண்டில் பிரிந்தனர்.

சுபம் படம்

சமந்தா தனது தயாரிப்பு நிறுவனமான ட்ரலலா மூவிங் பிக்சர்ஸை கடந்த ஆண்டு தொடங்கினார், மேலும் சுபம் அதன் கீழ் அவர் தயாரிக்கும் முதல் படம். பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், தனது கீழ் பணிபுரியும் அனைத்து நடிகர்களுக்கும் சமமான ஊதியம் வழங்க விரும்புவதாகக் கூறினார், “ட்ரலலா புரொடக்ஷன்ஸின் கீழ், ஒவ்வொரு அம்சத்திலும் நான் மிகவும் கவனமாக இருக்க விரும்புகிறேன். சமமான திறமை, சமமான ஊதியம் மற்றும் சமமான அனுபவம் ஆகியவற்றை நான் நம்புகிறேன். முடிந்தவரை, சமமான திறமை, சமமான ஊதியம் மற்றும் சமமான அனுபவம் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்.” என்றார்.