Sakshi Agarwal: 'இந்த விஷயத்த இதுக்கு முன்ன சொன்னதுல்ல.. அப்பா அம்மா சப்போர்ட் ரொம்ப முக்கியம்'- சாக்ஷி அகர்வால்
Sakshi Agarwal: சின்ன வயசில் தனக்கு உறவினரால் ஏற்பட்ட துன்புறுத்தல் குறித்து பேசி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால், ரக்ஷிதா ஆகியோர், இவர்கள் அனைவரும் இணைந்து தற்போது ஃபயர் எனும் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாந்தினியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சதிஷ்குமார் இயக்கியுள்ளார்.
'நாகர்கோவில் காசி வழக்கு'
இந்த ஃபயர் படம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நாகர்கோவில் காசியின் வழக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை எனக் கூறப்படுகிறது.
இப்படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி நடிகை சாக்ஷி அகர்வால், சாந்தினி ஆகியோர் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அந்தப் பேட்டியில், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், பெற்றோர் அளிக்கும் பாதுகாப்பு உணர்வு போன்றவை குறித்து பேசி உள்ளனர்.