தொடரும் வதந்திகள்.. கடவுளுக்கு எல்லாம் தெரியும்.. பொங்கி எழுந்த சாய் பல்லவி.. வைரலாகும் போஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தொடரும் வதந்திகள்.. கடவுளுக்கு எல்லாம் தெரியும்.. பொங்கி எழுந்த சாய் பல்லவி.. வைரலாகும் போஸ்ட்

தொடரும் வதந்திகள்.. கடவுளுக்கு எல்லாம் தெரியும்.. பொங்கி எழுந்த சாய் பல்லவி.. வைரலாகும் போஸ்ட்

Malavica Natarajan HT Tamil
Dec 12, 2024 12:02 PM IST

நடிகை சாய் பல்லவி குறித்து தமிழின் பிரபலமான பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்து தனது கண்டனங்களை தெரிவத்துள்ளார்.

தொடரும் வதந்திகள்.. கடவுளுக்கு எல்லாம் தெரியும்.. பொங்கி எழுந்த சாய் பல்லவி.. வைரலாகும் போஸ்ட்
தொடரும் வதந்திகள்.. கடவுளுக்கு எல்லாம் தெரியும்.. பொங்கி எழுந்த சாய் பல்லவி.. வைரலாகும் போஸ்ட்

சாய்பல்லவி எதிர்ப்பு

இதைப் பார்த்த நடிகை சாய் பல்லவி தனது எக்ஸ் அக்கவுண்ட் மூலம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, இதுபோன்று மீண்டும் ஆதாரமற்ற வதந்திகளை செய்திகளாக வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

நேற்று டிசம்பர் 11 இரவு தமிழ் செய்தி வலைத்தளத்தின் செய்தியைப் பகிர்ந்து கொண்ட சாய் பல்லவி, ராமாயணம் படத்தில் நடித்து வருவதற்காக நடிகை சாய் பல்லவி சைவமாக மாறியுள்ளதாகவும், அவர் எங்கு சென்றாலும் சைவ உணவுகளை மட்டுமே சமைக்க சிறப்பு சமையல்காரர்கள் இருப்பார்கள் என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

ஆதாரமற்ற வதந்திகள்

மேலும், சாய் பல்லவி இந்தப் படத்தில் சீதை கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவால் கோவமடைந்த சாய் பல்லவி அந்த செய்தியை டேக் செய்து தனது மறுப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "பல முறை, உண்மையில், ஒவ்வொரு முறையும், எனக்கு எதிராக ஆதாரமற்ற வதந்திகள், தவறான அறிக்கைகள் மற்றும் பொய்யான செய்திகள் எழுதப்பட்ட போதிலும் நான் அமைதியாக இருந்தேன்.

இனி அமைதியாக இருக்க மாட்டேன்

ஆனால் நான் இனி அமைதியாக இருக்க மாட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பது எல்லாம் கடவுளுக்கு தெரியும். அந்த செய்திகளை அப்படியே கடந்து செல்வதால் இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. அவர்கள் இதுபோன்ற வதந்திகள் பரப்புவதை நிறுத்துவதே இல்லை.

குறிப்பாக எனது படம் வெளியாகும் போதும், அறிவிக்கப்படும் போதும், எனது சினிமா வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணங்களிலும் இதுபோன்ற வதந்திகள் தவிர்க்க முடியாதவை ஆகிறது. இனிமேல், இதுபோன்ற மோசமான செய்திகள் எந்த பிரபல ஊடகங்களிடமிருந்தோ அல்லது நபர்களிடமிருந்தோ வந்தால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என்று சாய் பல்லவி எச்சரித்தார்.

சைவ பிரியர்

உண்மையில், சாய் பல்லவி எப்போதும் சைவ உணவுகளை மட்டுமே உண்பவர். இதை அவர் கடந்த காலங்களிலும் பலமுறை தெரியப்படுத்தி இருக்கிறார். ஓர் உயிர் இறப்பதை தன்னால் பார்க்க முடியாது என்பதால் சைவ உணவுகளை உண்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமரன் படத்தில் இந்து ரெபேகா வர்கீஸாக நடித்து அனைவர் மனங்களையும் சாய் பல்லவி கவர்ந்த பின் இப்போது, ரன்பீர் கபூருடன் ராமாயணம் படத்திலும், தெலுங்கில் நாக சைதன்யாவுடன் தாண்டேல் படத்திலும் நடித்து வருகிறார். லவ் ஸ்டோரி எனும் படத்திற்குப் பிறகு அவர்கள் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. அமரன் படம் தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.