Sai Pallavi: கிளாஸை கட்டடித்து நாள் முழுதும் டான்ஸ்.. ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.. பள்ளி விழாவில் சாய் பல்லவி ஷேரிங்ஸ்
Actress Sai Pallavi: கிளாஸை கட்டடித்து நாள் முழுதும் டான்ஸ் முதல் தான் இந்த நிலைக்கு வர ஒழுக்ககத்தை கடைப்பிடித்து வரை தான் படித்த பள்ளியின் ஆண்டுவிழாவில் பங்கேற்ற நடிகை சாய் பல்லவி மாணவர்களிடம் பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாக்களில் டாப் ஹீரோயினாக இருந்து வருபவர் சாய் பல்லவி. தமிழ் நடிகையான இவர் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருவதுடன் ராமயணம் படம் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கிறார். எம்பிபிஎஸ் படித்திருக்கும் சாய் பல்லவி, பல்வேறு டிவி ரியாலிட்டி டான்ஸ் ஷோக்களில் பங்கேற்று பிரபமாகி நடிகையானார்.
இதையடுத்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த நடிகை சாய்பல்லவி, கோவையில் உள்ள அவிலா கான்வென்ட் மெர்ரிகுலேஷன் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் நடிகை சாய் பல்லவி. அப்போது மாணவர்களுடன் உரையாடிய அவர் தனது பள்ளி வாழ்க்கை குறித்த நினைவலைகளை பகிந்தார்.
இந்த நிகழ்வின்போது தான் பேசிய விடியோவை நடிகை சாய் பல்லவி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் உணர்வூர்வமாக மாணவர்களிடம் சாய் பல்லவி பேசுகையில், "நான் இந்த ஆடிடோரியத்தில் பெரும்பாலான நேரத்தை கழித்துள்ளேன். கிளாஸை கட் செய்து விட்டு இங்கு வந்து தான் டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பேன். அப்போது நான் அட்டடென்ஸ் கொடுத்துவிட்டு இங்கு வந்து நாள் முழுவதும் பயிற்சி செய்வதாக கூறி கிளாஸை மட்டம் அடிப்பதை பெரிய புத்திசாலித்தனமாக நினைத்தேன்.
டான்ஸ்தான் என்னை இங்கு நிறுத்தியுள்ளது
நான் என்ன செய்கிறேன் என்பது ஆசிரியர்களுக்கு நன்கு தெரிந்தாலும், அமைதியாக எனது விருப்பத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். இப்போது அந்த டான்ஸ் தான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
அத்துடன் மேடை பயம் என்பது எனக்கு இள வயதிலேயே இல்லாமல் போனது. நான் இந்த மேடையில் பல முறை நடனமாடியுள்ளேன். சுமார் 12 ஆண்டுகள் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். நான் பெர்பார்மராக, எண்டர்டெயினராகவே இங்கு இருந்துள்ளேன். ஆனால் இப்போது உங்களிடம் பேசிக்கொண்டிருப்பது மிகவும் விநோதமான விஷயம். ஆனால் இதுவும் சிறப்பான தருணமாகவே உள்ளது.
மாணவர்கள் விருப்பத்துக்கு பெற்றோர்கள் ஆதரவளிக்க வேண்டும்
சில விஷயங்களை மாணவர்களாகிய உங்களிடம் பகிர விரும்புகிறேன். ஆனால் அவர்களுடன் பெற்றோர்கள் இருக்கிறார்கள். எனவே நான் சொல்வதை பெற்றோர்கள் ஆமோதிப்பார்களா என்பது எனக்கு தெரியாது.
இந்த காலகட்டத்தில் மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக சமூக வலைத்தளங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால் திறமைமிக்க ஆசிரியர்கள் இருக்கும் இதுபோன்ற பள்ளியில் படித்த வெளியேறி நான் சிறப்பாக நடனம் ஆடுவது, டாக்டருக்கு படித்து மருத்துவம் செய்வது போன்றவற்றில் சிறந்து விளங்குவதைத் தவிர, ஒரு நல்ல மனுஷியாக இருப்பது எப்படி என்பது நல்ல ஒழுக்கம் காரணம் என்பதை புரிந்து கொண்டேன்
ஒரு கட்டத்தில் நீங்கள் யார், பின்னாளில் என்னாவாக மாற விரும்புகிறீர்கள் என்பதை உங்களுக்குள்ளே நீங்கள் பேசி புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
மாணவர்களிடம் பகிர நிறையா இருக்கு
உண்மையை சொல்வதென்றால் எனது ரிப்போர்ட் கார்டை பார்த்தால் தெரியும், நான் என் தங்கையை விட குறைவான மதிப்பெண்களே பெறுவேன். என் தந்தையும் இங்கு உட்கார்ந்திருக்கிறார். நான் மீண்டும் இந்த பள்ளிக்கு வருவேன். ஏனென்றால் நான் மாணவர்களுடன் பகிர வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. என் வளர்ச்சிக்கு உதவிய ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த மேடையில் வைத்து நன்றியை உரிதாக்குகிறேன்" என்றார்
சாய் பல்லவி படங்கள்
கடந்த ஆண்டில் தீபாவளிக்கு வெளியான அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார் சாய் பல்லவி. மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்தில் மேஜர் மனைவி இந்து ரெபாக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து சாய் பல்லவி நடித்திருக்கும் தாண்டெல் என்ற தெலுங்கு படம் வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியாகிறது. இதுதவிர ராமாயணம் பார்ட் 1 படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் சாய் பல்லவி, ஏக் தின் என்ற மற்றொரு இந்தி படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்