AjithKumar: மாமியாருக்கு அதிக நெருக்கமான அஜித்; ரூம் வரை வந்த போட்டோ;கொதித்த செல்வமணி! - அஜித் ரோஜாவுக்கு அண்ணனான கதை!
AjithKumar: “படத்தை பொருத்தவரை, அதில் அந்த கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கவில்லை. இந்த நிலையில், நான் ஜானிடம் அந்த கேரக்டருக்கு அஜித் வேண்டாம். அவருக்கு பதிலாக ஜூனியர் ஆர்டிஸ்ட் யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.” - செல்வமணி!

AjithKumar: அஜித் குமாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி சில வருடங்களுக்கு முன்னர், தமிழ்நாடு நவ் சேனலுக்கு பேட்டியளித்து இருந்தார். அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “நான் அசுரன் என்ற படத்தை இயக்கினேன். அதில், ஒரு இளமையான ஜோடி ஒன்று வருவது போன்ற கதை அமைப்பு இருந்தது. அதற்காக நாங்கள் ஒரு பையனை தேடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான், ஜான் என்பவர் அஜித்தை என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த கேரக்டருக்கு அஜித்தை தேர்வு செய்யுமாறு கூறினார்.
அவ்வளவு தன்னம்பிக்கை இருந்தது
அஜித்தை பார்த்த மாத்திரத்திலேயே, அவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவரிடம் ஏதோ ஒரு கவரும் தன்மையானது இருந்தது. குறிப்பாக, அவரது கண்கள் மிக அழகாக இருந்தது. அவருடைய பாடி லாங்குவேஜில், அவ்வளவு தன்னம்பிக்கை இருந்தது. முதலில் ஒருவரை நமக்கு பிடிக்க வேண்டும். அப்போதுதான் அவரை வைத்து நாம் படம் இயக்க முடியும். அஜித்தை பார்க்கும் பொழுதே, அவர் பெரிய ஹீரோவாக வருவார் என்று எனக்குப் பட்டது.
ஆனால், படத்தை பொருத்தவரை, அதில் அந்த கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கவில்லை. இந்த நிலையில், நான் ஜானிடம் அந்த கேரக்டருக்கு அஜித் வேண்டாம். அவருக்கு பதிலாக ஜூனியர் ஆர்டிஸ்ட் யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். ஆனால், அஜித் பரவாயில்லை சார், அந்த கேரக்டரில் நடிக்கிறேன் என்று என்னிடம் எவ்வளவோ சொன்னார். ஆனால் நான் கடைசிவரை ஒத்துக் கொள்ளவில்லை. இரண்டு, மூன்று வருடங்கள் வேண்டுமென்றாலும் ஆகட்டும். செம்பருத்தி போன்று ஒரு படத்தில், அஜித்தை ஹீரோவாக போட்டு நாம் படம் எடுக்கலாம் என்று சொன்னேன்.
மாமியாருக்கு நெருக்கமான அஜித்குமார்
‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ திரைப்படத்தில், என் மனைவியுடன் அவர் இணைந்து நடித்தார். பொதுவாக, என்னுடைய மாமியார் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கெல்லாம் செல்ல மாட்டார். ஆனால், அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அஜித்திற்கும், அவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு விட்டது.
ஒரு கட்டத்தில், என்னுடைய மாமியார் அஜித்துடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார். அஜித் என்னுடைய மாமியாரை அம்மா, அம்மா என்று அழைத்தார். ஒரு கட்டத்தில் நெருக்கம் அதிகமானதில், என்னுடைய மாமியார் அவருக்கென்று தனியாக சமைத்து கொண்டு எடுத்துச் செல்லும் அளவிற்கு சென்று விட்டார். அதை பார்த்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. இதனையடுத்து நான் அவரை திட்டினேன். ஆனால், அவர் அவன் என்னை அம்மா என்று அழைத்து விட்டான். ஆகையால், அவன் எனக்கும் இன்னொரு பிள்ளை என்று பிடிவாதமாக இருந்தார். அவருடைய அறையிலும், அஜித்துடைய போட்டோவை அவர் மாட்டி இருந்தார். இப்போதும், அந்த போட்டோ இருக்கிறது.
கலைஞர் நிகழ்ச்சியில் கலக்கம்
அவருக்கும், எனக்கும் ஒரு நிகழ்ச்சியில் மனஸ்தாபம் ஏற்பட்டது. அது கலைஞருக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில், அஜித் மேடையில் அவரை, அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வற்புறுத்தி அழைத்ததாக, கொந்தளித்து பேசி இருந்தார். உண்மையில், நாங்கள் அவரை அந்த நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி எந்த வற்புறுத்தலும் செய்யவில்லை.
அப்போது நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தில்தான் அவர் படங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது விநியோகஸ்தர்களுக்கும் அஜித்திற்கும் ஏதோ பிரச்சினை என்று செய்தி இருந்தது. அப்போது, விநியோகஸ்தர்கள் அவருக்கு ரெட் கார்டு போட்டிருந்தார்கள். அந்தக் கோபத்தைதான் அஜித் அந்த மேடையில் காண்பித்தார். அப்போது, கவுன்சில் சார்பாக சில நடவடிக்கைகளை அவர் மீது எடுத்தோம். அதில் அவருக்கு என் மீது வருத்தம் இருந்தது.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்