Actress Rohini: ‘மலையாளம் மாறி இங்கேயும்..படம் அரசியலை மீறி என்கேஜ் பண்ணும்..’ - நடிகை ரோகிணி பேச்சு
Actress Rohini: ‘இது சம்பந்தமான உரையாடலை எங்குத் தொடங்கவேண்டும் என யோசித்து, முதலில் குடும்பத்தில் துவங்கணும் என ரொம்ப அற்புதமாக எழுதியிருக்கார்.’ - நடிகை ரோகிணி

Actress Rohini: ‘காதல் என்பது பொதுவுடமை’ படத்தின் இசைவெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
ஏன் கூடாது என்பதுதான்
நடிகை ரோகிணி பேசுகையில், "ஏன் 'கூடாது' என்பதுதான் படம் எடுக்கிறதுக்கான முதல் காரணம். 'இந்தப் படத்தை மலையாளத்தில் எடுங்க'ன்னு சொன்னபோது, 'இல்ல என்னோட தமிழ் ஆடியன்ஸ் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு'ன்னு ஒரு இயக்குநர் இப்படத்தைக் கொண்டு வந்திருக்கார்.
இது சம்பந்தமான உரையாடலை எங்குத் தொடங்கவேண்டும் என யோசித்து, முதலில் குடும்பத்தில் துவங்கணும் என ரொம்ப அற்புதமாக எழுதியிருக்கார். நான் குணச்சித்திர நடிகையாக நடிக்க ஆரம்பித்த பின், இந்த மாதிரி ஷேடுள்ள கேரக்டரில் நடிச்சதில்லை. இந்த லக்ஷ்மி கேரக்டரை என்னால் சரியாகப் பண்ண முடியுமான்னு நினைச்சேன்.
சேலஞ்சிங்கா இருந்துச்சு.
எத்தனை எத்தனை கேள்விகள் இந்தச் சமூகத்தில் இருக்கோ, அத்தனை கேள்விகளையும் லக்ஷ்மி மூலமாக இயக்குநர் கேட்க வச்சிருக்காரு. நான் சமூகத்தின் முகமாக இந்தப் படத்துல வர்றேன். அது ரொம்பச் சேலஞ்சிங்கா இருந்துச்சு.
அதோட, ரொம்ப அன்பான ஒரு அம்மாவோட பரிதவிப்பும் லக்ஷ்மியிடம் இருந்தது. நான் நிறைய அம்மா பாத்திரம் பண்ணியிருக்கேன். விட்னெஸ், தண்டட்டி, 3 என நான் பண்ண ஒவ்வொரு அம்மாவும் வேற வேற அம்மா. ஹீரோக்கு அம்மாவா நடிக்கணும் என இயக்குநர் யாராச்சும் சொன்னா, 'அம்மாங்கிறது ஒரு கதாபாத்திரமே கிடையாது.
அம்மா - பொண்ணு கதை.
ஹீரோக்கு அம்மா யாரு? கோபமானவங்களா? கஷ்டப்பட்டு வந்தவங்களா? இல்ல கர்வமா பேசுறவங்களா? அவங்களால கதையில் ஏதாச்சும் நடக்குதா?' எனக் கேட்பேன். சில படத்துல தான் நான் ரொம்ப சரியா நடிச்சிருக்கேன் எனத் திருப்தியா இருக்கும். அதுல இந்த லக்ஷ்மி கேரக்டரும் ஒன்னு. இது எங்களோட கதை. ஒரு அம்மா - பொண்ணு கதை.
இந்தப் படம் பேசும் அரசியலை மீறி, இந்தப் படம் உங்களை என்கேஜ் செய்யும். இங்கயும் மலையாளப் படங்கள் மாதிரி நல்ல படங்கள் எடுக்க முடியும், அதை ஆதரிக்க தமிழ் ஆடியன்ஸ் ரெடியா இருப்பாங்க என்பதை நாம் நிரூபிச்சுக் காட்டணும். எல்லாத்தையும் விட, பேசாப்பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே! அதுதான் கலையின் பொறுப்பும் அழகும். அதை நாங்க செய்திருக்கிறோம்" என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்