தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Riya Sen Celebrates Her Birthday On January 24

HBD Riya sen: யுவராஜூடன் காதல்.. தமிழில் தொடர் தோல்வி..'மச்சக் கன்னி' ரியா சென் பிறந்தநாள் இன்று!

Karthikeyan S HT Tamil
Jan 24, 2024 06:40 AM IST

இந்தி, தமிழ், பெங்காலி என ரவுண்டு கட்டி நடித்த நடிகை ரிமா சென்னுக்கு இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறாா்.

நடிகை ரியா சென்
நடிகை ரியா சென்

ட்ரெண்டிங் செய்திகள்

பாலிவுட் அறிமுகம்

1991 ஆம் ஆண்டில் வெளியான 'விஷ்கன்யா' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் எண்ட்ரியானார் ரியா சென். அந்தப் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக ரியா தோன்றி இருந்தார்.

கோலிவுட் அறிமுகம்

இயக்குனர் பாரதிராஜா இயக்கி 1999 ஆம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படத்தில் மனோஜூக்கு ஜோடியாக சிறப்பாக நடித்திருந்தார் ரியா சென். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் தோல்வியை சந்தித்திருந்தாலும் பாடல்கள் வெற்றி அடைந்திருந்தன. இதற்கு ரிமா சென் பங்களிப்பும் இருந்தது.

மச்சக்கன்னி

தாஜ்மஹால் படத்தில் 'மச்சக்கன்னி' என்கிற கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல், தன்னுடைய கண்களால் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தார் ரியா சென். இந்தப் படத்தில் 'ஈச்சி எலுமிச்சி..ஏடி கருவாச்சி பாடலில் கூட மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே.. ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே.. என்ற வரிகளை கூட வைரமுத்து சேர்த்திருப்பார். அந்த அளவுக்கு தன்னுடைய கண்களால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

மீண்டும் இந்தி சினிமா

தாஜ்மஹாலைத் தொடர்ந்து, நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான 'குட்லக்' படத்தில் செம்ம ஸ்டைலிஷ் நாயகியாக அறியப்பட்டார். தமிழில் இவர் நடித்த படங்கள் வர்த்தக ரீதியாக பெரிய அளவுக்கு பேசப்படவில்லை என்பதால், இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால் தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார். பாலிவுட்டில் 'ஸ்டைல்', 'சாஜீஸ்' 'கயாமத் : சிட்டி அன்டர் த்ரட்' போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்த 'ஸ்டைல்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவே இவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் துவங்கியது.

காதல்..சர்ச்சை..திருமணம்

பாலிவுட் நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அஷ்மித் பட்டேல் ஆகியோரை காதலித்து வந்த ரியா, பின்னர் அவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டாதல் பிரிந்தார். ரியா சென்-ஐ முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் காதலித்ததாகச் செய்திகள் வந்தன. இவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாகத் தோன்றினர். ரியா, தனது ஆண் நண்பரான அஷ்மித் படேலுடன் படுநெருக்கமாக இருக்கும் 90 விநாடி வீடியோ கிளிப் ஒன்று 2005-ல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த எம்எம்எஸ் வீடியோவில் இருப்பது தானல்ல என்று ரியா சென் மறுப்பு தெரிவித்திருந்தார். இதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் தொழிலதிபர் ஷிவம் திவாரி என்பவரை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை ரியா சென்.

90 களில் தொடங்கி 2009 வரை இந்தி, தமிழ், பெங்காலி என ரவுண்டு கட்டி நடித்த ரிமா சென்னுக்கு இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறாா். (ஜன.24) .. வாழ்த்துக்கள் ரிமா சென்..!

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.