Kamal Hassan: அய்யோ கமல் படமா? தெறித்து ஓடிய நடிகைகள்.. பயத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Hassan: அய்யோ கமல் படமா? தெறித்து ஓடிய நடிகைகள்.. பயத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

Kamal Hassan: அய்யோ கமல் படமா? தெறித்து ஓடிய நடிகைகள்.. பயத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

Aarthi Balaji HT Tamil
Feb 02, 2024 08:00 AM IST

கமல் ஹாசனுடன் நடிக்க மறுத்த நடிகைகள் பற்றி பார்க்கலாம்.

கமல்
கமல்

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும், கமல் ஹாசனுடன் மட்டும் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை . 

கமல் ஹாசனுடன் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவருடன் காதல் காட்சியில் நடித்தால் கண்டிப்பாக முத்தக்காட்சி இருக்கும் என்றும், அது தனக்கு ஒத்துவராது என்பதால் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கனகா

‘கரகாட்டகாரன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி 90களில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை தேவிகாவின் மகள் கனகா. தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் கமலின் முத்தத்திற்கு பயந்து கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

நதியா

தமிழில் மிகக் குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும் நதியா தொடர்ந்து நடித்து வருகிறார். இன்றும் அவரை பார்த்தால் வயதாகி இருக்கும் உணர்வே இருக்காது. அந்த அளவிற்கு தனது இளமையை அப்படியே தக்க வைத்து வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்துள்ளார்.

தமிழ் , மலையாளம் , தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க 90களில் பெரும் போட்டி நிலவியது . அந்த ரேஸில் கமலும் இருந்தார். நதியாவுடன் டூயட் பாடுவது போன்ற அவரது சில காதல் படங்களில் அவரை நடிக்க வைக்க முயற்சித்தபோது , ​​​​அவர் முத்த காட்சிக்கு பயந்து வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.

ரோஜா

தெலுங்கு நடிகையாக இருந்தாலும் , நடிகை ரோஜாவுக்கு தமிழில் தற்போது வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்தாலும் கமல்ஹாசனுடன் மட்டும் ஜோடி சேரவில்லை. அதற்குக் காரணம் அவருடைய முத்தக் காட்சியில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது தான்.

கமலுடன் முத்தக்காட்சியில் நடிக்க சில நடிகைகள் தயக்கம் காட்டினாலும் ஆண்ட்ரியா, கவுதமி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பு, மது ஷாலினி, அபிராமி போன்ற நடிகைகள் துணிச்சலாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனா

ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானவர், மீனா. தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வாழ்க்கையைக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களின் நடித்து இருக்கிறார்.

முன்னதாக அவ்வை சண்முகி படத்தில் நடித்த போது ஏற்பட்ட பயம் பற்றி பேசினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ கமல் ஹாசன் சாரின் படம் என்றால் லிப் டு லிப் காட்சி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தபோது அதைப் பற்றி யோசிக்கவில்லை. 

என் மனதில் பல விஷயங்கள் இருந்ததால் இது எனக்கு நினைவில் இல்லை. இரண்டாம் நாள் உதவி இயக்குநர் வந்து முத்தக் காட்சி இருக்கிறது என்றார். நான் பயந்துவிட்டேன். ஐயோ, இதைப் பற்றி யோசிக்கவில்லை, எப்படி செய்வது என பயந்தேன். என்னால முடியாது, டைரக்டரிடம் சொல்லுங்கள் என சொன்னேன்.

அதற்குள் ஷாட் ரெடி என்று சொல்லி அழைத்தார். நான் அழ ஆரம்பித்தேன். இந்த உரையாடல் எனக்கும் என் அம்மாவுக்கும் இடையில் உள்ளது. அங்கு யாருக்கும் தெரியாது. காட்சியில் உரையாடல். கமல் சார் அருகில் வந்து இந்த முறை நோ டயலாக் சொன்னார். அப்போது தான் அவருக்கு உயிர் வந்தது.

இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேச எனக்கு வசதியாக இல்லை. அவர்கள் அனைவரும் பெரிய மனிதர்கள். அஎன் எல்லா விஷயங்களையும் அம்மா பார்த்துக் கொள்கிறார்” என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.