Rashmika Mandanna: மீண்டும் ட்ரோலில் சிக்கிய நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.. பட புரொமோஷனில் சர்ச்சையான பேச்சு..
Rashmika Mandanna: நடிகை ராஷ்மிகா மந்தனா பட புரொமோஷனில் தான் ஹைதராபாத்தை சேர்ந்தவள் என அடையாளப்படுத்திக் கொண்டதால் சர்ச்சையில் சிக்கி ட்ரோலுக்கு உள்ளாகியுள்ளார்.

Rashmika Mandanna: நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா தன் பேச்சால் மீண்டும் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்படுகிறார். நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான சாவா படம் வெளியானது. இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியது சில கன்னடர்களை கோபப்படச் செய்துள்ளது. இதனால் அவர்கள் ராஷ்மிகாவை ட்ரோல் செய்கின்றனர்.
ராஷ்மிகாவின் அடையாளம்
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர். பின் தெலுங்கில் இருந்து பாலிவுட்டில் நுழைந்து தேசிய அளவில் பிரபலமானார். ஆனால் இப்போது எங்கு சென்றாலும் ராஷ்மிகா தன்னை ஹைதராபாத்தைச் சேர்ந்தவள் என்று கூறிக் கொள்கிறார். சமீபத்தில், 'சாவா' படத்தின் புரமோஷன்களின் போது, ராஷ்மிகா தன்னை ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார்.
வைரலாகும் ராஷ்மிகா பேச்சு
"நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவன். ஆனால் நான் தனியாகத்தான் இங்கு வந்தேன். இப்போது நானும் உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன். நன்றி" என்றார் ராஷ்மிகா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ட்ரோல் செய்வது சரி தான்
இதைப் பார்த்து கன்னடர்கள் ராஷ்மிகாவை ட்ரோல் செய்து வருகின்றனர். ரசிகர் ஒருவர், "குடகு மாவட்டம் விராஜ்பேட்டை, ஹைதராபாத்தில் உள்ளது என்று எனக்குத் தெரியாது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ளது ராஷ்மிகாவின் சொந்த ஊரான விராஜ்பேட்டை உள்ளது என நினைத்தேன் என கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொருவர் கருத்து தெரிவிக்கையில், "இத்தனை ஆண்டுகளாக உங்களை ட்ரோல் செய்து வரும் அனைவரையும் நான் குற்றம் சாட்டினேன், ஆனால் இப்போது நீங்கள் பேசியதைப் பார்க்கும்போது, அவர்கள் சொல்வது சரியானதாகத் தெரிகிறது.
அவர் சரியாக தான் பேசுகிறார்
இருப்பினும் வேறு சிலரும் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர். அவர் எப்போதும் தன் சொந்த ஊர் கூர்க் என்றும் கூறியுள்ளார் எனக் கூறி மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் கூர்க்கைச் சேர்ந்தவர் என்றும், அங்குள்ள மொழி பலருக்கும் தெரியாது என்பதால் விக்கி கௌஷலுக்கு (சாவா திரைப்பட ஹீரோ) அதனை கற்பிப்பதாகவும் ராஷ்மிகா பேசிய வீடியோவை பொது வெளியில் ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடியாக பகிர்ந்தார். ராஷ்மிகா எப்போதும் தான் கூர்க்கை சேர்ந்தவள் என்று கூறி வருகிறார், ஆனால் அவர் இப்போது ஹைதராபாத்தில் வசிப்பதால் அவ்வாறு கூறியிருக்க வேண்டும் எனவும் அந்த நப்ர் கூறுகிறார்.
பாரட்டப்படும் ராஷ்மிகா
விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'சாவா' வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) திரைக்கு வந்தது. இந்த படம் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. விக்கி மற்றும் ராஷ்மிகாவின் நடிப்பு பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. சாவா இந்த ஆண்டின் மிகப்பெரிய தொடக்க இந்தி படமாக மாறியுள்ளது.
சாவா படம்
சாவா என்றால் சிங்கக்குட்டி என்று பொருள். மராட்டிய சிங்கமான சிவாஜி இறந்த பிறகும், அவரது மகன் சாம்பாஜி எதிரிகளின் கையில் சிங்கத்தின் கனவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சாவா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இந்த வரலாற்று அதிரடி திரைப்படத்தில் விக்கி கௌஷல் சாம்பாஜியாக நடிக்கிறார். யேசுபாயாக ராஷ்மிகாவும், முகலாய பேரரசர் ஔரங்கசீப்பாக அக் ஷய் கண்ணாவும் நடித்துள்ளனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்