Rashmika Mandana: ‘எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க.. எல்லாம் கடவுளுக்குத் தான் தெரியும்..’ சோகமாக பேசிய ராஷ்மிகா
Rashmika Mandana: நடிகை ராஷ்மிகா மந்தனா காலில் காயம் பட்டு படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் இருப்பதால் தன் படத்தின் இயக்குநர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Rashmika Mandana: நடிகை ராஷ்மிகா மந்தனா ஜிம்மில் பயிற்சி செய்த போது தனது காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை குறித்து புகைப்படங்களுடன் கூடிய பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் தனது வரவிருக்கும் படங்களின் இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா தற்போது சிக்கந்தர், தாமா மற்றும் குபேரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த சமயத்தில் காலில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தமாதம் ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கோரினார். மேலும், தான் விரைவில் திரும்பி வருவேன் என்றும் அனைவருக்கும் அந்தப் பதிவில் உறுதியளித்துள்ளார்.
காயமடைந்த காலுடன் போட்டோ
அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு நாற்காலியில் அமர்ந்து, தனக்கு முன்னால் ஒரு மேஜையில் தலையணையை வைத்து அதன் மேல் கால்களை போட்டு ஓய்வெடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் தன் முகத்தின் பாவணைகளை வேறு வேறாக மாற்றியும் பதிவிட்டுள்ளார்.
எல்லாம் கடவுளுக்குத் தெரியும்
அந்தப் பதிவில், "இது இனிய புத்தாண்டாக இருக்கும். எனது மதிப்புமிக்க உடற்பயிற்சி எனும் கோவிலில் நான் உடற்பயிற்சி செய்தபோது காயமடைந்தேன். இதனால் நான் அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு 'ஹாப் முறையில்' இருக்கப் போகிறேன். அது கடவுளுக்கு மட்டுமே தெரியும். இதையடுத்து நான் தாமா, சிக்கந்தர் மற்றும் குபேரா படத்தின் செட்களுக்கு மீண்டும் செல்வேன் என்று தெரிகிறது!
"என் இயக்குநர்கள், தாமதத்திற்கு மன்னிக்கவும்... என் கால்கள் தற்போது படப்பிடிப்புக்கு பொருத்தமானவை அல்ல, அவை சரியானதை உறுதிப்படுத்திக் கொண்டு நான் விரைவில் திரும்பி வருவேன் எனக் கூறியுள்ளார்.
ஜிம்மில் ராஷ்மிகாவுக்கு காயம்
பிட்னஸ் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்து வரும் ராஷ்மிகா, அவ்வப்போது ஜிம்மில் மேற்கொள்ளும் பல்வேறு உடற்பயிற்சி விடியோக்களை தனது சமூக வலைத்தளபக்கித்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டபோது நடிகை ராஷ்மிகா எதிர்பாராத விதமாக காயமடைந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் ஷுட்டிங்கில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருக்கும் ராஷ்மிகா, தற்போது நடித்து வரும் படத்தில் இருந்து ப்ரேக் எடுத்துள்ளார். அவரை காயம் ஏற்பட்ட போதிலும், உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நடிகைக்கு நெருக்கமான வட்டார தகவல்கள்தெரிவித்துள்ளன.
அதிக சம்பளம் பெறும் நடிகை
இந்த ஆண்டில் ராஷ்மிகா நடிப்பில் சாவா, சிக்கந்தர், தாமா ஆகிய பாலிவுட் படங்களிலும், தி கேர்ள்பிரண்ட் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகும் குபேரா படத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் டாப் 30 அண்டர் 30 வயது போபர்ஸ் பட்டியலில் ராஷ்மிகாவும் இடம்பிடித்திருந்தார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருந்து வருகிறார்.
ராஷ்மிகா புதிய படங்கள்
சல்மான் கான், காஜல் அகர்வால், சத்யராஜ், ஷர்மன் ஜோஷி உள்பட பலர் நடிக்கும் சிக்கந்தர் படத்தை ஏ.ஆர், முருகதாஸ் இயக்குகிறார். கதையின் நாயகியாக ராஷ்மிகா நடிக்கும் தி கேர்ள்பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன்இயக்குகிறார்.
மராட்டிய மகாராஜா சத்ரபதி சம்பாஜி மகாராஜ், வாழ்க்கைய அடிப்படையாக கொண்ட சாவா என்ற மராத்தி மொழி நாவலின் தழுவலாக அதே பெயரில் சாவா படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கௌசாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா.
அதேபோல் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கும் குபேரா படத்தில் தனுஷ், நாகர்ஜுனா ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.

டாபிக்ஸ்