கெட்டிமேளம் டும்..டும்..திருமணத்துக்கு தயாரான இடையழகி ரம்யா பாண்டியன்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கெட்டிமேளம் டும்..டும்..திருமணத்துக்கு தயாரான இடையழகி ரம்யா பாண்டியன்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

கெட்டிமேளம் டும்..டும்..திருமணத்துக்கு தயாரான இடையழகி ரம்யா பாண்டியன்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Oct 18, 2024 04:52 PM IST

வளைவு நெளிவான இடுப்பு போட்டோ மூலம் ட்ரெண்டான இடையழகி ரம்யா பாண்டியன் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த தொழிலதிபரும், யோகா பயிற்சியாளரை கரம் பிடிக்கிறார்.

திருமணத்துக்கு தயாரான இடையழகி ரம்யா பாண்டியன்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
திருமணத்துக்கு தயாரான இடையழகி ரம்யா பாண்டியன்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பாலோயர்களை கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது போட்டோ ஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாகி வருகிறார். அப்படித்தான பச்சை புடைவை அணிந்து தனது இடையழகை காட்டி இவர் பகிர்ந்த புகைப்படம் வைரம் இணையத்தில் சென்சேஷன் ஆனது.

ரம்யா பாண்டியன் திருமணம்

பிரபல சினிமா இயக்குநர் துரை பாண்டியன் மகளான ரம்யா பாண்டியன் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் பிரபல யோகா பயிற்சியாளரான லோவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். ரம்யா பாண்டியன் - லோவல் தவான் திருமணம் ரிஷிகேஷ் பகுதியில் கங்கை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் கோயில் அருகே வரும் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதைத்தொடர்ந்து இவர்களின் திருமண வரவேற்பு வரும் நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெற இருக்கிறது.

ரம்யா பாண்டியன் - லோவல் தவான் காதல் கதை

கடந்த ஆண்டில் பெங்களுருவில் உள்ள ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் ஆசரமத்தில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் லோவல் தவானை சந்தித்துள்ளார் ரம்யா பாண்டியன்.

சர்வதேச யோகா பயிற்சியாளராக இருந்து வரும் லோவல், நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலில் விழுந்தனர்.

தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் தம்பதிகள் ஆக போகிறார்கள். லோவல் தவான் பப்ளிக் லெபாரேட்டரி என்ற நிறுவத்தை லுதியானா உள்பட பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறார். இவரது தந்தை ரமேஷ் அத்வான் பஞ்சாப்பில் மிக பெரிய தொழிலதிபராக உள்ளார்.

திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியான தென்காசி மாவட்டம் இலஞ்சியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நடிப்பு, மாடலிங் தவிர இயற்கை விவசாயமும் செய்து வருகிறார்.

ரம்யா பாண்டியன் படங்கள்

பயோ மெடிக்கல் எஞ்சினியரிங் படித்து முடித்திருக்கும் ரம்யா பாண்டியன், தமிழில் டம்மி டப்பாசு என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு ராஜுமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.

தொடர்ந்து ஆண் தேவதை, ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாலும், மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான முகிலன், சோனி லைவ் ஓடிடியில் வெளியான ஆக்சிடன்டல் பார்மர் அண்ட் கோ போன்ற சீரிஸ்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் 3வது ரன்னர் அப் ஆனார். அதே போல் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது ரன்னர் அப் ஆகியிருந்தார்.

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது திருமதி ஆகவுள்ளார்.