Actress Rambha: நடிகை ரம்பாவை அழவிட்ட விவேக்.. 6 வருஷமா நடந்த சம்பவம்.. ரம்பா ஷேரிங்ஸ்
Actress Rambha: நடிகை ரம்பா தனக்கும் நடிகர் விவேக்கிற்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Actress Rambha: தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்த கதாநாயகி ரம்பா. இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் தனக்கும் நடிகர் விவேக்கிற்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
ரம்பாவின் மிரர்
நான் உன்னருகே நான் இருந்தால் படத்துல நான் நடிகை ரம்பா கேரக்டர்லயே நடிச்சிருப்பேன். அந்தப் படத்துல கோழி பிடிக்குற சீன், பனையாரம் சீன் எல்லாம் ரொம்ப பேமஸ். அப்போ அந்த படத்துல ஷூட்டிங்கு நான் ரெடியாகுற மாதிரி ஒரு சீன் இருக்கும். அப்போ, நான் இந்த கண்ணாடிய வச்சு தான் மேக்கப் எல்லாம் போட்டுட்டு இருப்பேன்.
விவேக் செய்த சம்பவம்
அப்போ ஷாட் அப்போ விவேக் சார், என்னோ மிரர் கேட்டாரு. எல்லாரும் சாதாரணமா முகம் பார்க்க தான கேப்பாங்க. அதுனால நான் அவர்கிட்ட கொடுத்தேன். அவர் அந்த மிரர்ர அப்படியே ரூம்க்கு எடுத்துட்டு போயிட்டாரு. சரி நானும் ஷூட் முடிஞ்சு தருவாரு, ஈவனிங் கிளம்பும் போது தருவாருன்னு பாத்துட்டு இருக்கேன்.
அழுகையே வந்துடுச்சு
ஆனா அவரு தரவே இல்ல. அவரு என்கிட்ட சொல்லாம கொல்லாம சென்னை கிளம்பி போயிட்டாரு. அடுத்த நாள், அடுத்த படம்ன்னு அவர பாக்குறப்போ எல்லாம் அந்த கண்ணாடிய நான் கேட்டுட்டே இருக்கேன். நான் எனக்கு தரவே மாட்டேன்னு சொல்லிட்டாரு. அவரு என்னோட மிரர்ர தரவே இல்ல. அது எனக்கு அழகையே தந்துடுச்சு.
அதுக்கு அப்புறம் அவர்கிட்ட 6 வருஷம் தொடர்ந்து கேட்டுட்டே இருந்தேன். ஆனா அவரு குடுக்கவே மாட்டாரு.
டார்ச்சர் பண்ணேன்
இப்போ நான் ஏன் சொல்றேன்னா, சில மெமரிஸ் என்னைக்கும் மறக்கவே மறக்காது. இப்போ விவேக் சாரே இல்ல. நான் அவர்கிட்ட எவ்ளோ டார்ச்சர் பண்ணிருக்கேன். இப்போ அதெல்லாம் நெனச்சா ஏன் இப்படி எல்லாம் பண்ணேன்னு தோனுது.
பாபாவோட புது மிரர்
இந்த சம்பவத்துக்கு அப்புறம் என்னோட வீட்ல இருக்கவங்க எனக்காக புதுசா ஒரு மிரர் செஞ்சி கொடுத்தாங்க. அதுக்கு அப்புறம் இத நான் யாருக்கும் தர்றதே இல்ல. அதோட இல்லாம நான் இந்த மிரர் பின்னாடி பாபா போட்டோ வச்சிட்டேன். எதுக்கு வச்சேன்னா, என் மிரர்ற யார் எடுத்தாலும் அவங்கள பனிஷ் பண்ணனும்ன்னு வச்சிருத்தேன் என தன்னோட மிரர் கதையை சொல்லி இருக்கிறார்.
உன்னருகே நானிருந்தால் படம்
உன்னருகே நானிருந்தால் என்ற திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் செல்வா இயக்கத்தில் வெளியான நகைச்சுவை திரைப்படம். இப்படத்தில் பார்த்திபன், மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். அவர்களுடன், மனோரமா, விவேக், மணிவண்ணன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் டித்திருந்தனர். இப்படத்தில் ரம்பா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ரம்பாவை வைத்து, ஷூட்டிங் எடுத்த காட்சிகள் பலராலும் ரசிக்கப்பட்டன.
