தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Rachita Mahalakshmi Supports Her Husband And Bigg Boss Contestant Dinesh's Enemy Contestant Vichitra

BiggBoss7: தினேஷை மறைமுகமாக திட்டிய ரச்சிதா - ஓ அப்படி போகுதா கதை!

Marimuthu M HT Tamil
Jan 14, 2024 04:39 PM IST

நடிகர் தினேஷை திட்டுவதுபோல், நடிகை ரச்சிதா போட்ட பதிவு வைரல் ஆகி வருகிறது.

BiggBoss7: தினேஷை மறைமுகமாக திட்டிய ரச்சிதா - ஓ அப்படி போகுதா கதை!
BiggBoss7: தினேஷை மறைமுகமாக திட்டிய ரச்சிதா - ஓ அப்படி போகுதா கதை!

ட்ரெண்டிங் செய்திகள்

விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரை நாயகியாக அறிமுகம் ஆனவர், நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அப்போது அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் தினேஷ் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் மனதார காதலித்து இருவீட்டாரின் அனுமதியோடு திருமணம் செய்து கொண்டு, தத்தம் கேரியரில் கவனம் செலுத்தத் தொடங்கினர். அதன்படி, ரச்சிதா மகாலட்சுமி சரவணன் - மீனாட்சி தொடரில் நடிக்கத்தொடங்கினார். அவருக்கென்று ஒரு தனி ஃபேன் பேஸ் உருவானது. அதைத் தொடர்ந்து ரியல் ஜோடி இருவரும் இணைந்து, ஜீ தமிழில் நாச்சியார்புரம் சீரியலில் ரீல் ஜோடியாக நடிக்கத் தொடங்கினர். பின் கோவிட் 19 சூழலால் பாதியிலேயே அந்த சீரியல் கைவிடப்பட்டது. பின், 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.

அப்போது பல்வேறு பேட்டிகளில் தனது மனைவி ரச்சிதாவுடன் சேரமுடியாமல் இருப்பது குறித்த ஏக்கத்தை தினேஷ் வெளிப்படுத்தினார். அது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் வெளிப்பட்டது. இதனிடையே பிக்பாஸ் சீசன் 7ல் இருந்த மற்றொரு பங்கேற்பாளரான விசித்ராவுக்கும் தினேஷுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. அப்போது பாத்திரம் தேய்த்துக்கொண்டு இருக்கும்போது, விசித்ரா, தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கமெண்ட் செய்தார். மேலும், அப்போது கேமராவிடம் பேசுவதாக நினைத்து ரச்சிதா திரும்ப தினேஷ் கூட எல்லாம் சேர்ந்திடாதே என ஜாடை மாடையாகப் பேசினார். இதற்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் கூட கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் இன்று பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில், தினேஷுக்கு எதிர் தரப்பு போட்டியாளராக கருதப்படும் விசித்ராவின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ரச்சிதா, ’இதயங்களை வெல்வது தான் முக்கியம். விசித்ரா என் இதயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என் இதயத்தை மட்டுமின்றி, என் ஆன்மாவையும் ஜெயித்துவிட்டீர்கள்’ எனப் பதிவிட்டு இருந்தார். இப்பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. என்னதான் இருந்தாலும், ரச்சிதா - விசித்ராவுக்கு சப்போர்ட் செய்திருக்கக் கூடாது என நெட்டிசன்கள் புலம்பிவருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.