Actress Raashi Khaanna: 'பாலிவுட் காப்பி அடித்து வெற்றி பெறுகிறது.. மக்களுக்கு தேவை டப்பிங் படம் இல்ல'- நடிகை ராஷி கண்ணா
Actress Raashi Khaanna: தென்னிந்திய திரைப்படங்களிலிருந்து பாலிவுட் படங்கள் காப்பியடித்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெறுவது உண்மை தான் என நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

'பாலிவுட் காப்பி அடித்து வெற்றி பெறுகிறது.. மக்களுக்கு தேவை டப்பிங் படம் இல்ல..'- நடிகை ராஷி கண்ணா
Actress Raashi Khaanna: தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் ராஷி கண்ணா, ஹிந்துஸ்தான் டைம்ஸின் நேர்காணலில் ஹிந்தி மற்றும் தென்னிந்திய சினிமா பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்தப் பேட்டியில், அவர், "தென்னிந்திய திரைப்படங்களிலிருந்து பாலிவுட் படங்கள் காப்பியடித்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெறுவது உண்மை என்றும், இந்த உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.
ரீமேக்கில் ஹிட்
இந்திய அளவில் திரைப்படங்கள் உருவாகும் இந்த காலகட்டத்தில், தென்னிந்திய திரைப்படங்களை பாலிவுட் வெற்றிகரமாகப் பின்பற்றி பாக்ஸ் ஆபிஸில் தங்கம் வெல்ல முயற்சிப்பதாக ஒரு கருத்து தெரிவிக்கிறது. இந்தப் போக்கு உண்ம என்பதை ராஷி ஒப்புக்கொள்கிறார்.
