'பிராங்க்'கால் அழும் நிலைக்கு போன பிரியா வாரியார்.. என்னதான் இருந்தாலும் இப்படியா பண்றது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'பிராங்க்'கால் அழும் நிலைக்கு போன பிரியா வாரியார்.. என்னதான் இருந்தாலும் இப்படியா பண்றது?

'பிராங்க்'கால் அழும் நிலைக்கு போன பிரியா வாரியார்.. என்னதான் இருந்தாலும் இப்படியா பண்றது?

Malavica Natarajan HT Tamil
Published Apr 23, 2025 08:24 PM IST

நடிகை பிரியா வாரியார் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடந்த பிராங்க் சம்பவத்தால் அவர் அழும் நிலைக்கே சென்று விட்டதாக கூறி இருக்கிறார்.

'பிராங்க்'கால் அழும் நிலைக்கு போன பிரியா வாரியார்.. என்னதான் இருந்தாலும் இப்படியா பண்றது?
'பிராங்க்'கால் அழும் நிலைக்கு போன பிரியா வாரியார்.. என்னதான் இருந்தாலும் இப்படியா பண்றது?

வைரலான பிரியா வாரியர்

நடிகை பிரியா வாரியார் சமீபத்தில் நடித்த படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் இவர் அர்ஜூன் தாஸுடன் இணைந்து தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடினர். இது இணையம் முழுக்க வைரலாகி வந்த நிலையில், பிரியா வாரியார் போகும் இடமெல்லாம் இந்தப் பாடலுக்கு நடனமாடச் சொல்லி கேட்டு வந்தனர். அப்படி இருக்கும் நிலையில், இந்தப் பாடலை ரீகிரியேட் செய்ததை பாராட்டும் விதமாக ஒளிபரப்பப்பட்ட வீடியோ மூலம் நடிகை பிரியா வாரியாரை பிராங்க் செய்த சம்பவம் நடந்துள்ளது.

பிராங்க்கில் சிக்கிய பிரியா வாரியர்

சமீபத்தில் பிரியா வாரியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ள்ளார். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், பிரியா வாரியாரிடம் சிறப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். பின்னர், 'குட் பேட் அக்லி' படத்தில் சிம்ரனின் நடனத்தை பிரியா பிரதிபலித்ததற்காக விஜய் பாராட்டிய வீடியோவை திரையிட்டு காட்டுகிறார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். அத்தோடு நில்லாமல் அந்த வீடியோவை மீண்டும் காட்டும்படியும் கேட்டுள்ளார். “இது உண்மையா? மீண்டும் காட்டுங்க” என்று கேட்டுருக்கிறார்.

பொங்கிய பிரியா வாரியர்

ஆனால், தொகுப்பாளர் அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு AI மூலம் உருவாக்கப்பட்டது என்று தெளிவுபடுத்துகிறார். “சாரி, இது உண்மையல்ல,” என்று சொல்லியதும், அந்த வீடியோவை காட்டியவர்கள் மீது கோபப்பட்டார். பின் அதிர்ச்சியடைந்த பிரியா வாரியர் நிலைமையை சமாளிக்க சிரித்ததுடன், “இது கொஞ்சம் அதிகம்... இது உண்மையில் தவறு, நியாயமே இல்லை. நான் கிட்டத்தட்ட இந்த வீடியோவை பார்த்து அழுதே விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

விஜய்யின் ஏஐ வீடியோ

மார்பிங் செய்யப் பயன்படுத்தப்பட்ட வீடியோ கடந்த வாரம் நடிகர் விஜய்யின் ஐடி பிரிவு நிர்வாகிகளின் விரிவான கூட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகம் (TVK) ஐடி பிரிவின் X (முன்னாள் ட்விட்டர்) கணக்கின்படி, அவர் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வீடியோவில் கூட்டத்தில் பேசி, அவர்களை 'விரிட்சுவல் வாரியர்ஸ்' என்று அழைத்தார்.

பிரியா வாரியர்

2019 ஆம் ஆண்டில் 'ஒரு அடார் லவ்' படத்தின் மூலம் பிரியா வாரியல் சினிமாவில் மிகப் பிரபலமானார். இந்தப் படத்தின் ஒரு காட்சி வைரலானபோது பிரியா வாரியர் மொழிகளை கடந்து பிரபலமானார். அப்போதிருந்து, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் நடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் வெளியான 'யாரியன் 2' என்ற இந்தி படத்திலும் நடித்தார்.

பிரியா சமீபத்தில் ஆதிக் ரவீச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோருடன் நடித்தார். சிம்ரனின் கிளாசிக் பாடலான 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா'வை மீண்டும் ரீகிரியேட் செய்து பாராட்டுகளைப் பெற்றார்.