Premi Mahendran: ‘7 வருஷம்தான் அவரோட வாழ்ந்தேன்.. ஆனா 70 வருஷம் வாழ்ந்த திருப்தி… ஆனா!' - பிரேமி!
அவருடன் நான் ஏழு வருடங்கள் தான் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் 70 வருடங்கள் வாழ்ந்த திருப்தி எனக்கு இருக்கிறது. அவ்வளவு அழகாக அவர் பார்த்துக் கொண்டார். நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. அப்போது என்னுடைய மகன் வயிற்றில் இருக்கிறான்.
மகேந்திரனின் இரண்டாவது மனைவியான பிரேமி அவருடன் வாழ்ந்த வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அவள் விகடன் சேனலுக்கு பேசிய அவர், “ மகேந்திரனிடம் வரும் நடிகர்களுக்கு நடிக்க தெரியவில்லை என்றாலும், அவர்களை அவர் நடிக்க வைத்து விடுவார். அவ்வளவு அழகாக சொல்லித் தருவார். எனக்கு உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் மிகப்பெரிய கேரக்டரை வடித்துக் கொடுத்தார் அதன் பின்னர் ஜானி படத்திலும் என்னை நடிக்க வைத்தார்.
ஜானி படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்த பல முன்னணி இயக்குநர்கள், அவர்களது படத்தில் என்னை நடிக்க வைக்க கேட்டார்கள். ஆனால் இயக்குநர் மகேந்திரன் அதற்கு அனுமதிக்கவில்லை. அவரது பேச்சை என்னால் மீற முடியவில்லை.
அவருடன் நான் ஏழு வருடங்கள் தான் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் 70 வருடங்கள் வாழ்ந்த திருப்தி எனக்கு இருக்கிறது. அவ்வளவு அழகாக அவர் பார்த்துக் கொண்டார். நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. அப்போது என்னுடைய மகன் வயிற்றில் இருக்கிறான்.
டெல்லியில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் இவரை நடுவராக தேர்ந்தெடுத்து வரச்சொல்லி இருந்தார்கள். இவர் என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிருந்தார். ஒரு நாளைக்கு ஆறு ஏழு படங்கள் பார்க்க வேண்டியிருக்கும்.
அங்கு முழுக்க முழுக்க ஆண்களே நிரம்பியிருந்தார்கள். என்னை அவர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கவில்லை; உடனே மகேந்திரன் என் மனைவியை நீங்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என்றால், நான் இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னார்.
இதனையடுத்து என்னை அவர்கள் உள்ளே அனுப்பினார்கள். நாங்கள் படங்களை பார்த்தோம். இந்த கொடுப்பினையெல்லாம் யாருக்கு கிடைக்கும். அவரோடு வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமானது. கடைசியில் நான் தான் வேண்டாம் என்று சொன்னேன்.” என்று பேசினார்.
காதல் கதை
காதல் முளைத்த கதை குறித்து பிரேமி பேசும் போது, “நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தோம்,பார்த்தோம், பழகினோம். விருப்பப்பட்டோம். அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று எனக்கு தெரியும். ஆனாலும் நான் அவரை விரும்பினேன். அது தவறு. அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது என்று தெரிந்த பின்னராவது நான் அவரை விட்டு சென்று இருக்க வேண்டும். அதுதான் நியாயமான விஷயம். அந்த விஷயத்தில் நான் செய்தது தவறுதான். அதற்கான தண்டனையை நான் நன்றாகவே அனுபவித்து விட்டேன்.
அவருடன் கிட்டத்தட்ட நான் ஒரு ஏழு வருடங்கள் வாழ்ந்தேன். எங்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். ஏழு வருடங்களுக்குப் பிறகு அவர் படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டார். அதனால் அவரால் இரண்டு குடும்பத்தையும் கையாள முடியவில்லை.
அதனால் அவர் என்னை விட்டு விலகி விட்டார். அவர் பிரிந்த பின்னர், நான் மிக மிக கஷ்டப்பட்டேன். மன ரீதியாகவும் சரி, பணரீதியாகவும் சரி, மிகப்பெரிய கஷ்டத்தை சந்தித்தேன். என்னுடைய குடும்பம்தான் அந்த சமயத்தில் எனக்கு கை கொடுத்து, அவர்களோடு அணைத்துக் கொண்டது. நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். தனி மனுஷியாக இருந்து என்னுடைய பையனை வளர்த்தேன்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்