Poonam Pandey: ‘நான் சாகவில்லை! ஆனால் இதுதான் காரணம்!’ பூனம் பாண்டே பரபரப்பு வீடியோ
”Poonam Pandey About CervicalCancer: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்னை கொல்லவில்லை. ஆனால் இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய அறிவு இல்லாததால் ஆயிரக்கணக்கான பெண்களின் மரணம் அடைந்துள்ளனர்”
பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், தாம் சாகவில்லை என்றும் உயிரோடு இருப்பதாகவும் நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகை பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றால், நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் என கூறி சர்ச்சையை கிளப்பினார்.
அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பாண்டே தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது.
பூனம் பாண்டேயின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட பதிவில், “இன்று காலை எங்களுக்கு கடினமாக உள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடன் தொடர்பு கொண்ட ஒவ்வொருவரும் அவரை அன்புடன் சந்தித்தனர். இந்த துயர நேரத்தில், நாங்கள் தனியுரிமையை கோருவோம். நாங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்திற்கும் அவரை அன்புடன் நினைவில் கொள்வோம் ” என நேற்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பூனம் பாண்டேயின் இன்ஸ்டாகிராம் பதிவு பலரை கவலையில் ஆழ்த்தி இருந்த நிலையில், இன்றைய தினம் இன்ஸ்டாகிராமில் தோன்றி இன்றைய தினம் (03-02-2024) புதிய வீடியோ ஒன்றை பூனம் பாண்டே வெளியிட்டுள்ளார்.
அதில், முக்கியமான ஒன்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் - நான் இங்கே இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்னை கொல்லவில்லை. ஆனால் இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய அறிவு இல்லாததால் ஆயிரக்கணக்கான பெண்களின் மரணம் அடைந்துள்ளனர். இது மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை நம்மால் முற்றிலும் வராமல் தடுக்க முடியும். HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகளில் முக்கியமானது. இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன.
விமர்சன விழிப்புணர்வுடன் ஒருவரையொருவர் மேம்படுத்தி, ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம் நோயின் பேரழிவு தாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து #DeathToCervicalCancer கொண்டு வர பாடுபடுவோம் என பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்