Pooja Hegde: தெரியாம சொன்ன வார்த்தைக்கு இப்படியா? நெட்டிசன்களால் ட்ரோலுக்கு உள்ளான புட்ட பொம்மா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pooja Hegde: தெரியாம சொன்ன வார்த்தைக்கு இப்படியா? நெட்டிசன்களால் ட்ரோலுக்கு உள்ளான புட்ட பொம்மா!

Pooja Hegde: தெரியாம சொன்ன வார்த்தைக்கு இப்படியா? நெட்டிசன்களால் ட்ரோலுக்கு உள்ளான புட்ட பொம்மா!

Malavica Natarajan HT Tamil
Feb 04, 2025 10:24 PM IST

Pooja Hegde: அல்லு அர்ஜூன் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான அல வைகுந்த புரமலோ தமிழ் படம் என நடிகை பூஜா ஹெக்டே கூறியது தற்போது தெலுங்கு ரசிகர்களிடம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Pooja Hegde: தெரியாம சொன்ன வார்த்தைக்கு இப்படியா? நெட்டிசன்களால் ட்ரோலுக்கு உள்ளான புட்ட பொம்மா!
Pooja Hegde: தெரியாம சொன்ன வார்த்தைக்கு இப்படியா? நெட்டிசன்களால் ட்ரோலுக்கு உள்ளான புட்ட பொம்மா!

சர்ச்சையை கிளப்பிய புட்ட பொம்மா

இந்த ஒரு பாடல் தெலுங்கு தாண்டி, மற்ற மொழி ரசிகர்களையும் இந்தப் படத்தின் மீது கவனம் ஈர்த்தது. பூஜா ஹெக்டேவை பலரும் புட்ட பொம்மா என்றே அழைக்கத் தொடங்கினர். இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அல வைகுந்த புரமுலோ படம் தமிழ் படம் என்று கூறியதால் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள். அல்லு அர்ஜுன் நடித்த இந்த சூப்பர் ஹிட் படத்தைப் பற்றி அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கு படம்

பூஜா ஹெக்டே- அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுந்த புரமுலோ படம் பயங்கரமான ஹிட் அடித்த படம். தெலுங்கில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தப் படம், திரையுலக சாதனைகளைப் படைத்தது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். ஆனால், இது ஒரு தெலுங்குப் படம் என்பதை அவர் மறந்து, இது ஒரு தமிழ்ப் படம் என்று ஒரு பேட்டியில் அவர் கூறியதால், அவர் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

தெலுங்கு படங்களில் கமிட் ஆகாத பூஜா

பூஜா ஹெக்டே சமீப காலமாக தெலுங்குப் படங்களில் அதிகம் நடிப்பதில்லை. அதில் இருந்து விலகி இருக்கிறார். அதனால்தான் அல வைகுந்த புரமுலோ போன்ற ஹிட் படத்தை கூட ஒரு தமிழ்ப் படம் என்று அவர் கூறிவிட்டார் என்றும், அவர் அப்படி பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் ஷாஹித் கபூர் உடன் ஹிந்தியில் தேவா என்ற படத்தில் நடித்தார். அதன் புரொமோஷனுக்காக பூஜா ஹெக்டே பல பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் அவர் ANIக்கு அளித்த பேட்டியில் இந்தத் தவறைச் செய்துவிட்டார்.

படம் நன்றாக இருந்தால்

"அல வைகுந்த புரமுலோ ஒரு தமிழ்ப் படம். அது ஒரு பான் இந்தியா படம் இல்லை. இருந்தாலும் ஹிந்தி ரசிகர்கள் அதை வரவேற்றனர். அதேபோல் DJ (துவ்வாட ஜகந்நாதம்) படத்தையும். கதை நன்றாக இருந்தால் அது ரசிகர்களைச் சென்றடையும்" என்று பூஜா அந்தப் பேட்டியில் கூறியது பலரை அதிர்ச்சியடையச் செய்தது.

தெலுங்கில் அவருக்குக் கிடைத்த பெரிய ஹிட் படங்களில் அல வைகுந்த புரமுலோ ஒன்று. அப்படிப்பட்ட படத்தை அவர் தமிழ்ப் படம் என்று கூறியது அல்லு அர்ஜுன் ரசிகர்களையும், தெலுங்குப் பட ரசிகர்களையும் கடுப்படையச் செய்துள்ளது. அதனால் அந்த வீடியோ வைரலாகி, அவர் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

பூஜா ஹெக்டேயின் ஹாட் கிஸ்

தேவா படத்தில் பூஜா ஹெக்டே ஷாஹித் கபூருடன் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தெலுங்குப் படங்களில் அவர் அதிக அளவில் கவர்ச்சியைக் காட்டவில்லை.

ஆனால், சமீப காலமாக அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால், தேவா படத்தில் ஷாஹித் கபூருடன் ஹாட் கிஸ்ஸுக்கு சம்மதித்திருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.