தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Pavithra Lakshmi Emotional Interview About Her Mom Death And Friends

Pavithra lakshmi: ‘அம்மா இறந்த அந்த சமயத்துல.. எனக்கும் சொந்தம் பந்தம் இருந்திருந்தா..’ - பேட்டியில் அழுத பவித்ரா

Kalyani Pandiyan S HT Tamil
Jan 23, 2024 10:39 PM IST

நமக்காக நாம் போராடி தானே ஆக வேண்டும். எனக்கும் உறவினர்கள் உதவி செய்யும் வகையில் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு போராடி இருக்க மாட்டேன். அது இல்லை என்று ஆகிவிட்டதால், நமக்காக நாம் ஓடிதான் ஆக வேண்டும்.

பவித்ரா லட்சுமி பேட்டி!
பவித்ரா லட்சுமி பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

 இந்தப்பாடலை எழுதி இசையமைத்து இருக்கிறார் சூப்பர் சிங்கர் ஆதி. இந்தப்பாடல் தொடர்பாக எஸ்.எஸ். மியூசிக் சேனலுக்கு பேசிய பவித்ரா, “அம்மா தான் சொல்லிக்கொண்டே இருப்பார் உனக்கு இவ்வளவு ஞாபகம் இருக்கிறது என்றால் தயவு செய்து பாடல்கள் எழுது என்று.. 

அதே நேரம் டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்பதை ஊக்குவிக்க மாட்டார். அவர் இப்போது நான் பாடலாசிரியராக பாடல் எழுதியிருப்பதை பார்த்தால் பெருமைப்படுவாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தை நான் செய்திருக்கிறேன். 

எனக்கு சிறிய வயதில்  பாட்டு பாட பெரிதாக வராது. ஆனால் நான் பாடல் பாட வேண்டும் என்று சொல்லி, அதற்கான முயற்சிகளை அம்மா எடுத்தார். 

நமக்காக நாம் போராடி தானே ஆக வேண்டும். எனக்கும் உறவினர்கள் உதவி செய்யும் வகையில் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு போராடி இருக்க மாட்டேன். அது இல்லை என்று ஆகிவிட்டதால், நமக்காக நாம் ஓடிதான் ஆக வேண்டும். 

எல்லோரும் என்னை மிகவும் ஸ்ட்ராங்கான பெண்மணி என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், எனக்கும் ஒரு சாதாரண பெண்மணி போல வீட்டில் பணம் வாங்கிக் கொண்டு, ரிலாக்ஸாக அமர வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் அதற்கான சூழ்நிலை இல்லை. நமக்கு வேண்டியதை நாமே செய்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்

அம்மா இறந்தபோது நான் ஊரில் இல்லை. காசியில் இருந்தேன். நான் அங்கிருந்து வருவதற்குள், என்னுடைய நண்பர்கள் எனது அம்மாவிற்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டார்கள். அவர்கள் அன்று அப்படி செய்யவில்லை என்றால் என்னால் என்ன செய்திருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை.” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.