என் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.. பிளாஸ்டிக் சர்ஜரி பஞ்சாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பவித்ரா லக்ஷ்மி
தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக வெளிவரும் வதந்திகளிக்கு நடிகை பவித்ரா லக்ஷ்மி தற்போது மௌனம் களைத்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் தனக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைத்து குடும்பங்களையும் சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடத்த புகழினால் அவர் சில திரைப்படங்களிலும் நடித்தார். மேலும் இவரது ஆல்பம் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பேசுபொருளான பவித்ரா லக்ஷ்மி
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் பவித்ரா லக்ஷ்மியின் புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன் வைரலாகி பெரும் பேசுபொருளாக மாறியது. காரணம் அந்த புகைப்படங்களில் மிகவும் மெலிந்த உடலுடன் இருப்பது போன்ற போட்டாக்கள் அவை. இந்த தோற்றத்தில் பவித்ரா லக்ஷ்மியை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆயிற்று? ஏதாவது உடல்நலப் பிரச்சனயா?அல்லது உடல் அழகிற்காக பிளாஸ்டிக் சர்ஜரி ஏதாவது செய்துள்ளாரா என்பது குறித்து எல்லாம் கேள்வி எழுப்பி வந்தனர்.