Parvati Nair: வருங்கால கணவருக்கு அன்பு முத்தம்.. தொழிலதிபருடன் நடிகை பார்வதிக்கு நிச்சயதார்த்தம் - க்யூட் புகைப்படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Parvati Nair: வருங்கால கணவருக்கு அன்பு முத்தம்.. தொழிலதிபருடன் நடிகை பார்வதிக்கு நிச்சயதார்த்தம் - க்யூட் புகைப்படங்கள்

Parvati Nair: வருங்கால கணவருக்கு அன்பு முத்தம்.. தொழிலதிபருடன் நடிகை பார்வதிக்கு நிச்சயதார்த்தம் - க்யூட் புகைப்படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 03, 2025 02:10 PM IST

வருங்கால கணவருக்கு அன்பு முத்தம் பகிர்ந்து கொண்டிருக்கும் நடிகை பார்வதி நாயர், திருமண நிச்சியதார்த்தம் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். என் வாழ்வில் அன்புக்குரியவரிடம் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருப்பதி ஆர்வமாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

தொழிலதிபருடன் நடிகை பார்வதிக்கு நிச்சயதார்த்தம் - க்யூட் புகைப்படங்கள்
தொழிலதிபருடன் நடிகை பார்வதிக்கு நிச்சயதார்த்தம் - க்யூட் புகைப்படங்கள் (paro_nair instagram)

சென்னையை சேர்ந்த தொழில்லதிபரை மணக்க இருக்கும் பார்வதி தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

வருங்கால கணவருக்கு அன்பு முத்தம்

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை பார்வதி நாயர். இதையடுத்து தனது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இன்ஸாடவில் வெளியிட்டிருக்கும் பார்வதி நாயர், ஸ்டோரியாகவும் பகிர்ந்துள்ளார்.

தனது திருமணம் குறித்து பெங்களுரு டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், " எனது வாழ்வில் அன்புக்குரியவருடன் புதிய பயணத்தை தொடங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

திருமண நி்ச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கும் பார்வதி நாயருக்கு பிரபலங்கள், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தனது நிச்சயதார்த்த புகைப்படங்களில் வருங்கால கணவர் ஆஷ்ரித் அசோக்குக்கு அன்பு முத்தம் பகிர்ந்துள்ளார் பார்வதி நாயர்.

பார்ட்டியில் பூத்த காதல்

தனது திருமணம் குறித்து பார்வதி நாயர் பெங்களுரு டைமஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "பார்டி ஒன்றில் வைத்து தான் எதார்த்தமாக நான் அசோக்கை சந்தித்தேன். அன்று நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து நெருக்கமானோம்.

எங்களது திருமணம் உணவில் இருந்து ஹல்தி, மெஹந்தி, சங்கீத் என திருமண சார்ந்த அனைத்து சடங்குகளும் மலையாளி மற்றும் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடக்கும். பிப்ரவரி 6ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. திருமணத்துக்கு பின் வரவேற்பு கேரளாவில் நடைபெறும்" என கூறியுள்ளார்.

அசோக் சென்னையில் தொழிலதிபராக இருந்தாலும், அவரது பூர்வீகம் ஹைதராபாத் என தெரியவந்துள்ளது. பார்வதி கேரளாவையும், அசோக் ஹைதராபாத்தையும் சேர்ந்தவராக இருந்தாலும் இருவரும் தங்களது திருமணத்தை சென்னையில் கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மாடலிங் டூ நடிப்பு

கேரளாவை பூர்வீகமாக கொண்ட பார்வதி நாயர் அபுதாபியில் பிறந்து வளர்ந்துள்ளார். கர்நாடகாவில் உள்ள மணிபால் இன்ஸ்டிடியூட்டில் படித்த இவர் மாடலிங் ஆர்வத்தால் அதில் ஈடுபட்டார்.

மலபார் கோல்ட், பிரஸ்டீஜ், ரிலையன்ஸ், ஜிஆர்டி கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் என பிரபல பிராண்டுகளின் விளம்பரங்களில் தோன்றிய இவர், மலையாளத்தில் பாப்பின்ஸ் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகனார். இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என சேர்த்து 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பார்வதி நாயர் தமிழ் படங்கள்

சமுத்திரகனி இயக்கத்தில் ரவி மோகன் நடித்து 2014இல் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் தோன்ற தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பார்வதி நாயர். இதன் பின்னர் கமலுடன் உத்தம வில்லன், அஜித்துடன் என்னை அறிந்தால் போன்ற படங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். கடந்த ஆண்டில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர வெள்ள ராஜா என்ற அமேசான் ப்ரைம் வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். பார்வதி நாயர் நடிப்பில் ஆலம்பனா என்ற படம் உருவாகி வருகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.