ஹேமா கமிட்டி அறிக்கை: கேரள முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் நடிகை பார்வதி.. வைரலாகும் பதிவு
5 ஆண்டுகளுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையை அரசாங்கம் கையாண்ட விதத்தைக் கண்டித்து நடிகை பார்வதி திருவோத்து, முதல்வர் பினராயி விஜயனை டேக் செய்து கேள்வி எழுப்பி உள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை: கேரள முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் நடிகை பார்வதி.. வைரலாகும் பதிவு
மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பரவலான மற்றும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்களை முன்னிலைப்படுத்தி கடந்த ஆண்டு நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை, வெளியானது. இந்த அறிக்கை கேரள சினிமா துறை மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. அத்தோடு, கேரள சினிமா துறையில் பெரும் விவாதத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
இப்படி இருக்கையில், நடிகை பார்வதி திருவோத்து ஹேமா கமிட்டி அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள வழக்குகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் நிர்வாகம் தாமதம் செய்வதைக் குறை கூறி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேரள முதல்வரை டேக் செய்து இந்தப் பிரச்சனையை மீண்டும் கிளறியுள்ளார்.