தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  69 Years Of Kathanayaki: ஹீரோயினை மையப்படுத்திய பிளாக் அண்ட் ஒயிட் படம்! நடிப்பில் பல அபினயங்களை வெளிப்படுத்திய பத்மினி

69 Years of Kathanayaki: ஹீரோயினை மையப்படுத்திய பிளாக் அண்ட் ஒயிட் படம்! நடிப்பில் பல அபினயங்களை வெளிப்படுத்திய பத்மினி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 19, 2024 05:50 AM IST

ஹீரோயினை முன்னிலை படுத்தும் கதைகள் பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்துள்ளன என்பதற்கு சான்றாக பத்மினியின் நடிப்பில் வெளியான கதாநாயகி படம் உள்ளது.

கதாநாயகி படத்தில் பத்மினி
கதாநாயகி படத்தில் பத்மினி

தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், நடனம் ஆடும் பெண்ணாகவும் இருந்து ஹீரோயினாக ஆனவர் பத்மினி. நாட்டிய பேரொளி என பெயரெடுத்த இவர் ஹீரோயின் ஆன பிறகு கதாநாயகிய மையப்படுத்திய கதையில் நடித்த படம் தான் கதாநாயகி.

கே ராம்நாத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பத்மினி பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிஆர் ராமசந்திரன், தங்கவேலு, எம்என் ராஜம், டிகே ராமசந்திரன், ஏ கருணாநிதி உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

பத்மினியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்தே இந்த படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். வீட்டை விட்டு வெளியேறும் பெண் நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து பல்வேறு சிரமங்களை சந்தித்து கதாநாயகி ஆவதுதான் படத்தின் கதை. இதில் நாடக கம்பெனி நடத்தும் டி ஆர் ராமசந்திரன் மீது காதல், பின்னரும் இருவரும் இணைந்து வாழ்க்கையில் எப்படி ஜெயித்தார்கள் என்பதை காமெடி, எமோஷன் கலந்த படமாக கதாநாயகி அமைந்திருக்கும்.

பத்மினியின் நடிப்பு திறமைக்கு தீனி போட்டும் விதமாக இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தின் தன்மை இருக்கும். கதையின் தேவையறிந்து கண்களாலும், முக பாவனைகளாலும், உடல்மொழியாலும் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி தனக்கென தனியொரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார் பத்மினி.

ட்ரெண்டிங் செய்திகள்

ரெமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்த படம் ஆங்கில படமான ஹாப்பி கோ லவ்லி என்ற படத்தின் தழுவலாக உருவாகியிருந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த கதாநாயகி பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை அள்ளியது.

பிரதான ஹீரோக்கள் இல்லாமல் ஹீரோயினை மையப்படுத்தி வந்த பிளாக் அண்ட் ஒயிட் சினிமாக்களில் முக்கியமான படமாக இருந்து வரும் கதாநாயகி வெளியாகி இன்றுடன் 69 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9