இணையத்தில் வெளியானதா நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! தீயாய் பரவும் தகவல்..
நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானதாக தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் ஷேர் செய்து வரும் நிலையில், எக்ஸ் தள பக்க ட்ரெண்டிங்கில் ஓவியாவின் பெயர் வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் படியான படங்களில் நடித்திருந்தாலும், நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரது பேச்சும், குழந்தைத் தனமான செயல்களும் அவருக்கு அதிக ரசிகர்களைக் கொடுத்தது.
இந்நிலையில், மலையாளப் பெண்ணான இவரின் ஆபாச வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தற்போதுவரை ஒவியா தரப்பிலிருந்து எந்தவித கருத்தும் மறுப்பும் தெரவிக்கப்படாத நிலையில், இந்த வீடியோவை பலரும் எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் செய்து வருவதுடன், நடிகை ஓவியாவின் பெயரை ட்ரெண்ட் செய்துள்ளனர்.
களவாணி ஓவியா
தமிழ் சினிமாவில் நடிகர் விமலின் ஜோடியாக களவானி படத்தில் நடித்து, தனது அப்பாவித்தனமான முகத்தால் மக்கள் மனதில் அமர்ந்தவர் ஓவியா. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினாவில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.
பின்னர், அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் படியான படங்கள் அமையாததால், கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.பின், நடிகர் கதிருக்கு ஜோடியாக மதயானைக் கூட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். தொடர்ந்து அவர், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.
பிக்பாஸ் நட்சத்திரம்
இதற்கு இடையில் தான், விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார் ஓவியா. அங்கு அவர் பேசிய விஷயங்களும், அவரின் நடவடிக்கைகளும், அவரின் என்ணங்களும் மக்களுக்கு பிடித்துப்போக இவர் மீண்டும், மக்கள் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். அவருக்காக ஆர்மியும் உருவாக்கப்பட்டது.
இருப்பினும், இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வராத காரணத்தால், கவர்ச்சி பக்கம் சென்றார். பின் இவர் 90ml படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சந்தித்தார். இதற்கு மத்தியில் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை கூறி வந்த வண்ணமே இருந்தார்.
காதலில் தோல்வி
நான் பலரை காதலித்து, அவர்களுடன் உறவில் இருந்துள்ளேன். ஆனால், எந்த காதலும் உண்மையாக இருந்ததில்லை. காதலிலும், பண விவகாரத்திலும் பலரும் என்னை ஏமாற்றி உள்ளனர். ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்களுக்காக அடுத்தவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. நான் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு திருமணத்தின் மீதும், லிவிங் டூ கெதர் மீதும் நம்பிக்கை இல்லை. இப்போதைக்கு தனியாக வாழவே விரும்புகிறேன் எனக் கூறி இருந்தார்.
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட்
மேலும், சினிமாத் துறையில் நிறைய அட்ஜெஸ்ட்மென்ட்கள் உள்ளன. சினிமா என்பது ஒரு வேலை. ஒன்று கிடைக்கவில்லை என்றால் மற்றொன்று என கடந்து செல்ல வேண்டும். ஆனால், இங்கு பலருக்கும் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையை சமாளித்துக் கொண்டு வேலை செய்கின்றனர், பல பெண் கலைஞர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இப்போது வரை தொடர்ந்து அதிகரித்து வருவது அருவருப்பாக உள்ளது எனக் கூறியிருந்தார்.
இணையத்தில் பரவும் ஆபாச வீடியோ!
தொடர்ந்து, அவர் மது குடிப்பது, தான் போகும் இடங்களில் போட்டோ எடுப்பது போன்று ஏதாவது ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவார். இந்த நிலையில், ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்றை சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் உள்ள நபர்களின் முகங்கள் பிளர் செய்யப்பட்டிருந்தாலும் பெண்ணின் கையில் உள்ள டேட்டூவை வைத்து இது ஓவியா என பலரும் கூறி வருகின்றனர். இது உண்மையில் நடிகை ஓவியா தானா அல்லது ஏதேனும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவா என இதுவரை தகவல் வெளியாகவில்லை.
தற்போது வரை இந்த வீடியோ குறித்து ஓவியா தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. ஓவியாவிற்கு பிடிக்காத சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா, இல்லை அவரது பெயருக்கு களக்கம் விலைவிக்கும் வகையில் இப்படி செய்தனரா என இப்போது வரை தெரியவில்லை. ஆனால், சோசியல் மீடியாவில் இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு பேசுபொருளாகியுள்ளது.
டாபிக்ஸ்