அந்தரங்க வீடியோ விவகாரம்.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற ஓவியா.. உண்மையில் நடந்தது என்ன? குற்றவாளி சிக்குவாரா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அந்தரங்க வீடியோ விவகாரம்.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற ஓவியா.. உண்மையில் நடந்தது என்ன? குற்றவாளி சிக்குவாரா?

அந்தரங்க வீடியோ விவகாரம்.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற ஓவியா.. உண்மையில் நடந்தது என்ன? குற்றவாளி சிக்குவாரா?

Malavica Natarajan HT Tamil
Published Oct 14, 2024 06:38 PM IST

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், அந்த விவகாரம் குறித்து ஓவியா திரிச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தரங்க வீடியோ விவகாரம்.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற ஓவியா.. உண்மையில் நடந்தது என்ன? குற்றவாளி சிக்குவாரா?
அந்தரங்க வீடியோ விவகாரம்.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற ஓவியா.. உண்மையில் நடந்தது என்ன? குற்றவாளி சிக்குவாரா?

நடிகை ஓவியா தாரிக் என்ற நபருடன் நட்பில் இருந்ததாகவும், பின் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரிடமிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தாரிக் மார்பிங் செய்த வீடியோ ஒன்றை நடிகை ஓவியாவுடன் தொடர்புபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், தாரிக்கிடம் பல பெண்களின் வீடியோக்களும், மார்பிங் புகைப்படங்களும் உள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

களவாணி ஓவியா

தமிழ் சினிமாவில் நடிகர் விமலின் ஜோடியாக களவாணி டத்தில் நடித்து, தனது அப்பாவித்தனமான முகத்தால் மக்கள் மனதில் அமர்ந்தவர் ஓவியா. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினாவில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.

பின்னர், அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் படியான படங்கள் அமையாததால், கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.பின், நடிகர் கதிருக்கு ஜோடியாக மதயானைக் கூட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். தொடர்ந்து அவர், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.

பிக்பாஸ் நட்சத்திரம்

இதற்கு இடையில் தான், விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார் ஓவியா. அங்கு அவர் பேசிய விஷயங்களும், அவரின் நடவடிக்கைகளும், அவரின் என்ணங்களும் மக்களுக்கு பிடித்துப்போக இவர் மீண்டும், மக்கள் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். அவருக்காக ஆர்மியும் உருவாக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் கேள்வி

இந்த நிலையில், தான் இணையத்தில் இவரது பெயரை அசிங்கப்படுத்தும் விதமாக 17 வினாடிகளில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்த வீடியோ வைரலாகி, இந்திய அளவில் இவர் ட்ரெண்ட் செய்யப்பட்ட நிலையில், எதற்கும் சளைக்காமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவு செய்ததும் பலரும் வீடியோ குறித்து ஓவியாவிடம் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இதற்கிடையில், அந்த வீடியோவில் உள்ளது தான் இல்லை என விளக்கமளிப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில், ஓவியா வித்தியாசமாக அந்த கேலிகளையும் கிண்டல்களையும் கையாண்டு பதிலளித்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.

லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த ஓவியா

வழக்கமாக ஒருவரின் அந்தரங்க புகைப்படமோ, வீடியோவை சோசியல் மீடியாவில் வெளிவந்தால், முதலில் அதை மறுக்கத்தான் செய்வார்கள். அதன் பின்னரே, அந்த வீடியோ குறித்தும், அது எப்படி வெளியானது என்பது குறித்தும் விளக்கமளிப்பர். ஆனால், நடிகை ஓவியா அனைவரிலிருந்தும் வேறுபட்டு பதிலளித்துள்ளார்.

கூலாக ஹேண்டில் செய்த ஓவியா

ஓவியாவின் போட்டோவிற்கு கமெண்ட் செய்த நபர் ஒருவர், ஓவியாவின் 17 வினாடி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்டிருப்பார். இதைக் கண்ட ஓவியா, அவரிடம் என்ஜாய் என பதில் அளித்து, மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பின், வேறொருவர் வெளியான வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நேரம் உள்ள வீடியோ கிடைக்குமா என கேள்வி எழுப்பி இருந்தார். அதைக் கண்டு கோபமடைந்து ஓவியா பதிலளிப்பார் என எதிர்பார்த்தால், அடுத்த முறை ப்ரோ என கூலாக பதிலளித்துள்ளார்.

ஓவியாவுக்கு ஆதரவு குரல்

இந்த விஷயத்தில் நடிகை ஓவியா இப்படி நடந்துகொள்வார் என யாருமே எதிர்பார்க்காத நிலையில், அவர் சளைக்காமல் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துவருகிறார். இவரின் இந்த செயலை பலரும் ஆச்சரியமாக பாராட்டி வருகின்றனர். ஒரு இக்கட்டான சூழலில் அவர் பிரச்சனையை கையாண்ட விதத்தை பலரும் பாராட்டி, அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தும் வரும் நிலையில், ஓவியா தற்போது திருச்சூர் காவல் நிலையத்தில் இந்த விவகாரம் குறித்து புகாரளித்ததாக கூறப்படுகிறது.